உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை அவரது இல்லத்தில் சந்தித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நலம் விசாரித்தார்.
புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு தாமதமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் கங்கர் செவல் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சிலையை கரைத்து விட்டு திரும்பியபோது தேனீக்கள் கொட்டியதில் சிறுவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காதலனின் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரை மணந்து கொள்ள திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாய் கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவனின் தந்தை 2 மணி நேரம் காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேளச்சேரி ஏரியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை வீசிச்சென்ற காரணம் குறித்து அந்த பெண் கூறிய காரணம் தான் பலரையும் திடுக்கிட செய்துள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புறக்காவல் நிலையத்தில் இரவு பணியின் போது காவலர் மோகன் அங்கு நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர்களை தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டதாக புகார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.