உங்களுக்கும் COVID-19 ஏற்பட்டிருக்கலாம்: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்ததா?

தசை வலி, உடல் வலி, தலை வலி, மனக் குழப்பம், கண் வலி, கண்களில் பிரச்சனை போன்ற உபாதைகளை அனுபவித்திருந்தால், உங்களுக்கு தொற்று இருந்திருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2020, 10:33 AM IST
  • COVID-19 இன் பொதுவான அறிகுறியாக பலர் தலைவலியைத் தெரிவித்துள்ளனர்.
  • மனக் குழப்பம் COVID-19 இன் பொதுவான அறிகுறியாக உள்ளது.
  • சுவை மற்றும் வாசனையின் இழப்பு COVID-19 இன் ஆரம்ப அறிகுறியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கும் COVID-19 ஏற்பட்டிருக்கலாம்: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்ததா?  title=

புதுடில்லி: இன்றைய நிலவரப்படி, உலகெங்கிலும் சுமார் 74 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த எண்ணிக்கையில்ல் வைரஸுக்கு தங்களை பரிசோதித்துக் கொண்டவர்கள் மட்டுமே அடங்குவர். பயணங்களின் போதோ, தொற்று அதிகமாக இருக்கும் இடங்களில் அரசாங்கம் செய்த கட்டாய சோதனைகளாலோ அல்லது COVID-19 இன் பொதுவான அறிகுறிகள் தோன்றினாலோ மக்கள் பரிசோதித்துக் கொள்கிறார்கள்.

இருப்பினும், COVID-19 இன் பல நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளோ அல்லது அறிகுறிகளே இல்லாத நிலையோ இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் பரிசோதனைக்கு செல்வதில்லை. அவர்களுக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு இருப்பதில்லை. உலகெங்கிலும் உள்ள COVID-19 நோய்த்தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை அறிக்கையிடப்பட்டதை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீங்கள் அறியாமலேயே கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கலாம் என்பதைக் காட்டும் சில அறிகுறிகளை ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளது.

தங்களுக்கு ஏற்கனவே COVID-19 தொற்று வந்திருக்கலாம் என சிலர் கூறுவதை நாம் கேட்டுள்ளோம். அதிக அளவிலான மக்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆன்டிபாடிகள் சோதனைகள் எந்தவொரு அறிகுறிகளையும் காண்பிக்காத அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டதாக தெரியாதவர்களின் உடல்களில் COVID-19 ஆன்டிபாடிகள் உள்ளதைக் காட்டுகின்றன. இதன் மூலம், அவர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.  

COVID-19-ன் அறிகுறிகளாக இருந்தும், சாதாரன காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றின் அறிகுறிகளாக கருதப்பட்ட சில அறிகுறிகளின் பட்டியலை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

தசை வலி - ஆய்வின்படி, ஆய்வில் கலந்துகொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 44.8 சதவீதம் COVID-19 நோய்த்தொற்றின் விளைவாக தசை வலியை அனுபவித்தனர். தசை அல்லது உடல் வலி அமெரிக்க சி.டி.சி யால் COVID-19 இன் அறிகுறியாக பட்டியலிடப்பட்டுள்ளன. தசை வலிகள் நீண்ட COVID இன் அறிகுறியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தலைவலி - COVID-19 இன் பொதுவான அறிகுறியாக பலர் தலைவலியைத் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்க சிடிசியால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்ற பலருக்கு கடுமையான தலைவலி பதிவாகியுள்ளது. கண்பார்வை மோசமாக இருந்ததாலோ அல்லது மொபைல் மற்றும் கணினி திரையை அதிக நேரம் பார்த்ததாலோ ஏற்பட்டதாக நீங்கள் நினைத்த தலைவலி (Headache) உண்மையில் COVID-19-ன் அறிகுறியாக இருந்திருக்கலாம்.

ALSO READ: இங்கிலாந்தில் Coronavirus புதிய உருமாற்றம் பதிவு, லண்டனில் மூன்றடுக்கு லாக்டவுன்

மனக் குழப்பம் - COVID-19 இன் பொதுவான அறிகுறியாக மனக் குழப்பம் பதிவாகியுள்ளது. மேலும் ஆய்வில் பங்கேற்றவர்களில் 31.8 சதவீதம் பேர் அதை அனுபவித்தனர். இது அமெரிக்க (America) சி.டி.சி யின் அறிகுறியாக பட்டியலிடப்படவில்லை என்றாலும், COVID-19 இன் பல நோயாளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சுவை மற்றும் வாசனையின் இழப்பு - சுவை மற்றும் வாசனையின் இழப்பு COVID-19 இன் ஆரம்ப அறிகுறியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுகாதார நிறுவனங்களால் அறிகுறியாக பட்டியலிடப்படவில்லை என்றாலும், COVID-19 காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்த அறிகுறியை அனுபவித்திருக்கிறார்கள்.

கண்களில் பிரச்சனை – கண்களில் சிறிய பிரச்சனைகள் COVID-19 நோய்த்தொற்றின் அறிகுறியாக பதிவாகியுள்ளன. வைரஸ் உறுதி செய்யப்பட்ட பலர், நோய் தொடங்கியவுடன் கண்களில் வலி இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் பலருக்கு இந்த அறிகுறி இருந்தாலும், அவர்கள் அதை கண் பிரச்சன்னையுடன் ஒப்பிட்டனர், தொற்றின் அறிகுறியாகப் பார்க்கவில்லை.

இப்படி நீங்களும் இந்த காலத்தில் தசை வலி, உடல் வலி, தலை வலி, மனக் குழப்பம், கண் வலி, கண்களில் பிரச்சனை போன்ற உபாதைகளை அனுபவித்திருந்தால், உங்களுக்கு தொற்று இருந்திருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இவற்றை பொதுவாக நாம் தொற்றுட்ன ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. நாம் அறியாமலேயே COVID-19 தொற்று நம் உடலில் இருந்திருக்கலாம்!!

ALSO READ: COVID-ல் இருந்து மீண்டவர்களை மட்டும் தாக்கும் புதிய கொடிய நோய்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News