நடிகர் விஜயின் உறவினரும், மாஸ்டர் படத்தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான நிறுவனங்களில் 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் அவரிடமிருந்து பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்று முடிவடைந்த சோதனை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. கோவை பீளமேட்டில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கே.சி.பி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பொய் வழக்கு போட்டு காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.