பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்ப்பு. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள கவர்னர், நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், அ.தி.மு.க-வின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நாராயணசாமி முதல் முறையாக டில்லி சென்று பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஜூன் 22-ம் தேதி தனது அமைச்சர்களுடன் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இது குறித்து நாராயணசாமி கூறுகையில்:- புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்பதற்காகவே டில்லி செல்ல உள்ளோம். டில்லி பயணத்தின் போது பிரதமர் மோடி மட்டுமின்றி நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதலமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசுகிறார்.
அந்த வகையில் போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர்களும் இருந்தனர்.
2016 சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடும்பின்னடைவை சந்தித்தது. இதற்கான காரணத்தை விசாரிக்க தொடங்கியது அ.தி.மு.க தலைமை. தற்போது இந்த இரண்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநில அரசின் வருவாய்த்துறை மந்திரியாக ஏக்நாத் கட்சே அங்கம் வசித்தார். அவர் மீது நிலமோசடி புகார், தாவூத் இப்ராகிம் உடன் தொலைபேசியில் பேசியது என சர்ச்சைக்கு உள்ளான இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பல பகுதிகளில் பல மணி நேர மின்வெட்டு ஏற்படுவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதனால் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிகழ்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் தற்போது உள்ள மின்சார உற்பத்தி, மின் தேவை, மின்விநியோகம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.