ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கை வாழ, மக்கள் சரியான சமயத்தில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். சரியான நேரத்தில் தொடங்கப்படும் முதலீடு நிறைய லாபத்தை கொண்டு வரும்
இளம் வயதில், ஓடாக உழைத்து தேய்ந்தவர்கள், வயதான காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு நிலையான பென்ஷன் தேவை. உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே கவனித்து கொள்ள இது உதவியாக இருக்கும். எனவே நல்ல ஓய்வூதியத்தை கொடுக்கும் சிறந்த பென்ஷன் திட்டம் எது என்று கவனித்து அதில் சேமிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காத நிலை இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானதுதான். PFRDA உங்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில், நீங்கள் 70 வயதில் கூட ஓய்வூதியத்திற்கு தகுதி பெறலாம்.
2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) வழங்கப்படும் என நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது, ஆனால் அவர்களின் தேர்வு 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.
7th Pay Commission latest news: 7 ஆவது ஊதியக் குழு அறிவிப்புகள் குறித்து கவலையிலும் குழப்பத்திலும் உள்ள ஊழியர்களுக்காக மத்திய அரசு பல்வேறு கொடுப்பனவு தொடர்பான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. விடுப்பு பயண சலுகைக்கு பதிலாக LTC திட்டம் எளிதாக்கப்பட்டது.
7th Pay Commission latest news today: 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய தேசிய ஓய்வூதிய முறைமைக்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
NPS மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதியம் ஒப்பிடப்படுவதைப் பொறுத்தவரை, இரு திட்டங்களும் இயல்பு, கட்டமைப்பு மற்றும் நன்மை ஆகியவற்றில் வேறுபட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
ஆன்லைன் e-KYC (Know Your Customer) சந்தாதாரர்களுக்கு NPS டிஜிட்டல் பயணத்தை வழங்குவதால் கணக்கு திறக்கும் செயல்முறையை மேலும் எளிதாக்கும் என்று PFRDA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.எஸ் (NPS) அதாவது புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) ஓய்வு பெற்ற பிறகு செலவுகளை ஈடுகட்ட உதவும் ஒரு நல்ல திட்டமாகும். சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த ஓய்வூதிய திட்டத்தில் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்யலாம். NPS மீதான தனியார் நிறுவனங்களின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது.
வருமான வரி சேமிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. இன்னும் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 க்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஐ.டி.ஆர் பற்றி தெரியலாம், ஆனால் வரி சேமிப்பு பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா? தெரிந்துக் கொண்டால் உங்கள் வரியில் கொஞ்சம் எஞ்சும்...
ஓய்வூதியங்களை கண்காணித்து முறைப்படுத்தும் PFRDA (Pension Regulator) அறிமுகப்படுத்திய பல்வேறு டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்கள் ஆஃப்லைனில் ஆதார் எண்ணை பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய கணக்குகளைத் (NPS accounts) திறக்க முடியும்.
ஒருவர் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், அதற்கு கடினமான சூத்திரம் என்று எதுவும் இல்லை. வழக்கமான முதலீடு மற்றும் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது இதற்கான முக்கிய விஷயங்களாகும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் 50,000 ரூபாய் ஓய்வூதியத்தை பெறுவதற்கான வழியை இப்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.