Budget 2021-22 LIVE: நடுத்தர வர்க்கதினருக்கான வரிசலுகைகள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை

2021-22 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் டிஜிட்டல் முறையில் செய்கிறார்..

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 02:38 PM IST
Budget 2021-22 LIVE: நடுத்தர வர்க்கதினருக்கான வரிசலுகைகள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை title=

1 February 2021, 2:15 PM 
#UnionBudget2021: பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2, டீசல் லிட்டருக்கு ரூ.4. பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் அபாயம்.


1 February 2021, 1:49 PM
#UnionBudget2021: நடுத்தர வர்க்கதினருக்கான வரிசலுகைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை 


1 February 2021, 1:22 PM
#UnionBudget2021: தனிநபர் வாகனங்கள் 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 வருடங்கள் கழித்தும் தாமாக ஃபிட்னெஸ் சோதனையை செய்துகொள்ள வேண்டும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


1 February 2021, 1:14 PM
#UnionBudget2021: முக்கிய 5 இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும். அதேபோல பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


1 February 2021, 1:12 PM
#UnionBudget2021: சிறு நிறுவனங்களின் மூலதனம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது. இந்த நிதியாண்டில் விவசாய கடன் இலக்கு ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்த முடிவு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


1 February 2021, 1:04 PM
#UnionBudget2021

 

 


1 February 2021, 1:00 PM 
#UnionBudget2021: சென்செக்ஸ் 1420.03 புள்ளிகள் உயர்ந்து, தற்போது 47,705.80 ஆக உள்ளது. நிஃப்டி 362.70 புள்ளிகள் அதிகரித்து, தற்போது 13,997.30 ஆக உள்ளது.

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #Nirmalasitharaman | #AatmanirbharBharat | #Sensex | #Nifty


1 February 2021, 12:40 PM
#UnionBudget2021: ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டி களை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

 

 


1 February 2021, 12:31 PM 
#UnionBudget2021: திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு: 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு


1 February 2021, 12:14 PM
#UnionBudget2021: கோவிட் -19 தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடியை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


1 February 2021, 12:11 PM
#UnionBudget2021: அரசாங்கம் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


1 February 2021, 12:01 PM 
#UnionBudget2021: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப் பணிகளுக்காக 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 


1 February 2021, 11:44 AM
#UnionBudget2021: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #Nirmalasitharaman | #AatmanirbharBharat |


1 February 2021, 11:41 AM
#UnionBudget2021: நமது நாடு மிகக்குறைந்த #COVID19 இறப்பு விகிதங்களில் ஒன்றாகும். இது இன்று நாம் காணும் பொருளாதார மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #Nirmalasitharaman | #AatmanirbharBharat |


1 February 2021, 11:35 AM 

#UnionBudget2021: ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 

சுமார் 64,180 கோடி ரூபாய் உதவியுடன் மத்திய நிதியுதவித் திட்டம் பிரதமர் ஆத்மிரின்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா தொடங்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 

 


1 February 2021, 11:25 AM
#UnionBudget2021: கொரோனா காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும், அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மத்திய அரசு  மேற்கொண்டது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #Nirmalasitharaman | #AatmanirbharBharatKaBudget |


1 February 2021, 11:14 AM 
#UnionBudget2021: பொருளாதார சரிவுக்கு கொரோனா பாதிப்புதான் காரணம்: நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #Nirmalasitharaman | #AatmanirbharBharatKaBudget |

 


1 February 2021, 11:11 AM
#UnionBudget2021: கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டது: நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #Nirmalasitharaman | #AatmanirbharBharatKaBudget |


1 February 2021, 11:02 AM
#UnionBudget2021: யூனியன் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #Nirmalasitharaman | 


1 February 2021, 10:54 AM
#UnionBudget2021: 2021-22 வரவு செலவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #UnionBudget2021 | #Nirmalasitharaman |  


1 February 2021, 10:34 AM
#UnionBudget2021: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #UnionBudget2021 | #Nirmalasitharaman | #HemaMalini |


1 February 2021, 10:28 AM
#UnionBudget2021: பாஜக எம்.பி நடிகை ஹேமா மாலினி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

 

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #UnionBudget2021 | #Nirmalasitharaman | #HemaMalini |


1 February 2021, 10:22 AM
#UnionBudget 2021-22 ஐ தாக்கல் செய்வதற்கு முன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் மற்றும் நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகள், குடியரசு தலைவரை சந்தித்தனர்.

 

 


1 February 2021, 10:19 AM 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தனர்.

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #UnionBudget2021 | #Nirmalasitharaman | #AmitShah | #HarshVardhan |

 


1 February 2021, 10:11 AM
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்திற்கு வருகிறார்கள்.

 

 


1 February 2021, 9:39 AM
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல் படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,427 புதிய COVID-19 தொற்று பதிவாகியுள்ளது. 11,858 பேர் குணமடைந்து வெளியேறி உள்ளனர் மற்றும் 118 பேர் மரணம் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது

பாதிக்கபட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை: 1,07,57,610
குணாம்டைந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,04,34,983
மொத்த இறப்பு எண்ணிக்கை: 1,54,392
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  1,68,235


1 February 2021, 09:30 AM
இந்தியா வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதாவது இந்த முறை டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

www.zeehindustantamil.in | #ZeeHindustanTamil | #Budget2021 | #UnionBudget2021 | #Nirmalasitharaman |


1 February 2021, 09:15 PM

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய நிதி அமைச்சகத்தில் இருந்து அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனுராக் தாகுர் புறப்பட்டனர். COVID காரணமாக இந்த ஆண்டு முதல் முறையாக பட்ஜெட் ஆவண முறையில் இல்லாமல், ஸ்மார்ட் பட்ஜெட்டாக டிஜிட்டல் முறையில் சமர்பிக்க உள்ளார்.  


1 February 2021, 08:40 PM

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சகம் வந்தடைந்தார். 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.


1 February 2021, 08:21 PM

37 மாதங்களாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சரிவை சந்தித்துள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் முக்கியமானதாகும். 1991-ம் ஆண்டுக்கு பின் மிக முக்கியமான பட்ஜெட் இது என மூத்த காங். தலைவர் மணீஷ் திவாரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


1 February 2021, 08:18 PM

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் வீட்டில் வழிபாடு நடத்தினார்.


2021-22 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் டிஜிட்டல் முறையில் செய்கிறார்..

கொரோனா வைரஸ் தொற்றால் (Covid-19 pandemic), இந்தியா இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்கட்டுமான திட்டங்கள் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் மக்களவையில் (Parliament) இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

குறிப்பாக சுகாதாரத் துறைக்கு ஏதேனும் சலுகைகள், ஒதுக்கீடுகள் வழங்கப்படும் (NDA government) என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையிலான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டால் நிதியாண்டு (Budget 2021-22) தொடக்கமான ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு தொடங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

ALSO READ | Budget 2021: இந்திய பட்ஜெட் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்..!!

இந்நிலையில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை அமலுக்கு வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் பட்ஜெட் அறிக்கையை மடிக்கணினி உள்ளிட்டவற்றில் பதிவிறக்கம் செய்து பார்க்கும்வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் (coronavirus pandemic) மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிறு, குறு தொழில்கள் மற்றும் வேளாண்துறைக்கு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இடம்பெறக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News