ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடிப்பது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு உலகில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து மொத்தமாக 5 இந்திய வீரர்கள் இரட்டை சதங்களை அடித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
1991/92ல் நிறுவப்பட்ட ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதாகும். விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கத்தில் தனது சாதனைகளுக்காக இந்த விருதை நிறுவப்பட்ட ஆண்டில் முதலில் பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி இந்த விருதின் பெயரை மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என மாற்றினார்.
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் ஒரு பகுதி மகாராஷ்டிரா மாநிலத்திலும் நடைபெறுகிறது. மும்பையில் வசிக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை நிறைவு செய்துள்ளார். இப்போது அவரின் அடுத்த சாதனை சச்சின் 100 சதங்களை சாதனை உடைப்பது தான். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை தொடக் கூடிய தூரத்தில் சில நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். முதலில் யார் 100 சச்சின் சாதனையை உடைப்பார்கள் என்பதை பார்ப்போம்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷம் தான் இந்திய அணியின் பலம் என்று முன்னாள் இந்திய கிர்கெட் அணி சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார். இது அவரது 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி.
தூய்மை இந்தியா திட்டம் குறித்த கிரிக்கெட் வீரர் சச்சினின் கருத்தினை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்!
”இந்தாயாவை தூய்மைப் படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடைமை, எனவே நான் இனி ஒரு சிறு குழு அமைத்து அதற்கான பணிகளைத் துவங்குவோம்” என சச்சின் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலாக பரவி வரும் சச்சினின் முதல் சதம் வீடியோ!
சச்சின் டெண்டுல்கர் 1989-ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றர், எனினும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் தனது முதல் சதத்தினை அடித்தார்.
நேற்று 17 வயதுக்கு உட்பட்ட பிபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் சாங் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தீம் பாடல் நேற்று கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை உள்ளூர் மாநாட்டுக் குழு (LOC) மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்த பாடல் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தனித்துவத்தை நிரூபிக்கிறது.
2017-ம் ஆண்டுக்கான, 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது.
இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஒன்பது ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டோனியின் முடிவை மதிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை இபிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், டோனியின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்:-
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் தான் தத்தெடுத்த கிராமத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சென்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆந்திர மாநிலம் புட்டம்ராஜூ காந்திரிகா கிராமத்தை தத்தெடுத்தார். அக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறார்.
இன்று சச்சின் தெண்டுல்கர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு இருந்த சமூதாய கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று கிராம மக்களிடம் பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.