தமிழகத்தில் திங்களன்று 836 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இப்போது 5,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 8.60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்கப்படும் கவுண்டர்களில் (Ticket Window) இருந்து விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் தரவைத் திருடி, அதேபோல டிக்கெட் நகலை தயாரிப்பதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். இவை அனைத்தும் புரோக்கர்கள் மூலம் நடைபெறுவதாவும் அவர் கூறினார்.
வடக்கு டெல்டா மாவட்டங்களான தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி (Puducherry) முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 65 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் மற்றும் வழக்கத்தை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அலைகள் ஆகியவை அடுத்த இரண்டு நாட்களில் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவை ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் அக்டோபர் 5 முதல் நகரின் புறநகர் பாதைகளில் இயங்கும் அதன் "தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில்" ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மண்டல தலைமையகத்திலிருந்து ஆந்திராவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதிக்கும், எர்ணாகுளத்திலிருந்து கொச்சுவேலிக்கும் வாராந்திர ரயில்களை இயக்க இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜூன் 30 வரை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காகித டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் டிக்கெட்டுகளும் செப்டம்பர் 22 வரை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் குறிப்பிடப்பட்ட அளவில் முன்பதிவு செய்யாத 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் அடுத்தகட்டமாக, திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 72 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.