குழு டிக்கெட் புக்கிங்கா? தெற்கு ரயில்வே புதிய விதிமுறை

ரயிலில் பயணிக்க குழு டிக்கெட் வேண்டும் என்பவருக்கு தெற்கு ரயில்வே புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

Last Updated : Dec 24, 2019, 10:06 AM IST
குழு டிக்கெட் புக்கிங்கா? தெற்கு ரயில்வே புதிய விதிமுறை title=

ரயிலில் பயணிக்க குழு டிக்கெட் (கல்வி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல) வேண்டும் என்பவருக்கு தெற்கு ரயில்வே புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கல்வி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் தெற்கு ரயில்வே விதித்திருந்தது. இதனால் சுற்றுலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குழுக்களாக செல்வோர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்காக முன்பதிவு மைய கண்காணிப்பாளர், நிலைய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அதிலும் அவர்களும் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்குவார்கள்.

இந்நிலையில் தெற்கு ரயில்வே அந்த கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தி உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

கல்வி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல மொத்தமாக டிக்கெட்களை முன்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் இருந்தது. இந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த வகுப்பில் வேண்டுமானாலும், எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியா முழுவதும் எரிபொருள் சேமிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பல்வேறு பிரிவின் கீழ் எரிபொருள் சேமிப்பு அமைப்பு கணக்கிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் எரிசக்தி செயல்திறன் அமைப்பு விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது. இந்த வகையில், கடந்த 2018-19 ஆண்டில், மின் ஆற்றலை சேமிப்பதில், தெற்கு ரயில்வேயின், மின்சாரப் பிரிவு, மின் ஆற்றலை சேமிப்பதில், சிறப்பாக செயல்பட்டதற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News