மாநில சுகாதாரத் துறை செய்தி அறிக்கையின் படி, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,17,405 ஆக உள்ளது. இன்று 17,164 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,54,746 ஆக உள்ளது.
மே 2, ஞாயிற்றுக்கிழமை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை நடக்கவிருக்கும் நாளன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக, கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை இயங்க அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், ஞாயிறு முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளபடியால், இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை, தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு இருக்கும்.
தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இவை ஏப்ரல் மாதம் 26 முதல் அமலுக்கு வரும் என அறுவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளில் எவற்றிற்கெல்லாம் அனுமதி உண்டு, எவற்றுக்கு இல்லை என காணலாம்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் தொற்று நாளுக்கு நாள் மேல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மருத்துவ வசதிகளுக்காக தட்டுப்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் ஒரு உள்ள ஒரு கிராமமே கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் பல இடங்களில் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பலவகைப்பட்ட மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. முன்னெப்போதும் கண்டிறாத அளவுக்கு ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூடியை இன்று செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இன்று மட்டும் தமிழகத்தில் 11,681 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் புதிதாக தொற்று பதிவானவர்களில் 49 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.