வால்மார்ட் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு; 20 பேர் பரிதாப பலி..

டெக்சாஸில் வால்மார்ட்டில் 21 வயதுடையவர் கமூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  20 பேர் பரிதாபமாக பலி!!

Last Updated : Aug 4, 2019, 07:55 AM IST
வால்மார்ட் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு; 20 பேர் பரிதாப பலி.. title=

டெக்சாஸில் வால்மார்ட்டில் 21 வயதுடையவர் கமூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  20 பேர் பரிதாபமாக பலி!!

எல் பசோ: டெக்சாஸின் எல் பாஸோவில் உள்ள வால்மார்ட்டில் சனிக்கிழமை துப்பாக்கி ஏந்திய நர்மநபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரண்டு டசனுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு கலிபோர்னியா டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினான். இந்த திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர் என அம்மாநில கவர்னர் கிரெக் அபார்ட் தெரிவித்துள்ளார். மேலும் 25-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

இறந்தவர்களில் மூன்று மெக்ஸிகன் மக்களும், காயமடைந்தவர்களில் ஆறு பேரும் இருப்பதாக மெக்சிகோவின் ஜனாதிபதி மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்தார். நவீன அமெரிக்க வரலாற்றில் எட்டாவது மோசமான வெகுஜன படப்பிடிப்பு இதுவாகும். 1984 ஆம் ஆண்டில் சான் யிசிட்ரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 21 பேர் கொல்லப்பட்டனர். எல் பாசோவிற்கு கிழக்கே 650 மைல் (1,046 கி.மீ) தொலைவில் உள்ள டல்லாஸ் பகுதி நகரமான டெக்சாஸின் ஆலன் நகரைச் சேர்ந்த 21 வயது வெள்ளை ஆண் என சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

 

Trending News