அமெரிக்காவில் விமான விபத்து; 9 பேர் பலி

அமெரிக்காவின் சவுத் டகோடாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated: Dec 1, 2019, 11:24 AM IST
அமெரிக்காவில் விமான விபத்து; 9 பேர் பலி

அமெரிக்காவின் சவுத் டகோடாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 அமெரிக்காவின் சவுத் டகோடா மாகாணத்தில் தற்போது மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்கு கடந்த மூன்று நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சவுத் டகோடாவில் இன்று அதிகாலை விமானம் விபத்து ஏற்பட்டது. இந்த விமானம் ஒன்று புறப்பட சில நிமிடங்களில் பாறைகளில் மோதி கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்து  சாம்பர்லின் என்ற பகுதியில் நடந்துள்ளது. 12 பேர் சென்ற சிறிய ரக விமானம் விபத்திற்கு உள்ளானது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

இந்த விபத்தில் இரண்டு குழந்தைகளும் , பைலட்டும் பலியாகிவிட்டனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.