இந்த மியூசியத்தில் உங்களுக்கு செல்ஃபி-க்கு மட்டும் தான் அனுமதி!

உலகத்துல எத்தனை அருங்காட்சியகத்தை நீங்க பாத்துருப்பீங்க. அதில் செல்ஃபி அருங்காட்சியகம், ஐஸ் கிரீம் அருங்காட்சியகம் பாத்து இருக்கீங்களா?.. #MuseumofSelfies. 

Last Updated : Apr 6, 2018, 10:34 AM IST
இந்த மியூசியத்தில் உங்களுக்கு செல்ஃபி-க்கு மட்டும் தான் அனுமதி!  title=

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் தலைவிஎஇத்து ஆடும் கலாச்சாரத்தில் ஒன்று தான் செல்ஃபி. செல்ஃபி எடுப்பது கூடத்தான் தற்போது கலையாகிவிட்டது. செல்ஃபி-யின் மீதுள்ள ஒரு வித பற்றால் சில சமயம் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலஸில் இதற்காகவே செல்ஃபி அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளனர். 

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள `Museum of Selfies' எனும் அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்க எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த அருங்காட்சியகம் செல்ஃபி எடுப்பதற்காகவே பிரமானடமாக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம்.

காலையில் எழுந்தது பல் துலக்குவதில் ஆரம்பித்து இரவு தூங்கும் வரை செல்ஃபி-யில் தான் தனது வாழ்நாளை கழிக்கின்றனர் இளைஞர்கள். 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் செல்ஃபி-க்கு அடிமை எனச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.

முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை உண்மை. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த `ரெம்பிரன்ட்' என்பவரை இதற்கு `குரு' என்றும் சொல்லலாம். இவர் ஒரு ஓவிய கலைஞர் ஆவார். பல நூற்றுக்கும் முன்னரே தன் சுய உருவப்படத்தை வரைந்து அழகு பார்த்தவர் இவர். 

இவரைத பின் தொடர்ந்து ஆல்பிரெட்ச் டியூரர் (Albrecht Dürer), Van Gogh Dozens போன்றோரும் தங்களின் உருவப்படத்தை தாங்களே வரைந்து கொண்டவர்கள். தற்போது பரவிவரும் செல்ஃபி வைரல்களுக்கு இவர்கள் தான் முன்னோடி என தாராளமாக கூறலாம்.

இவர்களை நினைவு கூறும் வகையிலும், நாட்டில் அழிந்துவரும் பாரம்பர்யத்தைக் காப்பாற்றும் வகையிலும், இப்படி ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளனர் டாமி ஹான்டன் மற்றும் மேமிடோவ் என்ற இருவரும். அருகாட்சியகம் என்றாலே, நினைவுகளின் ஆலயம் என்றுதான் நாம அனைவருக்கும் தெரியும். 

பொதுவாக அருங்காட்சியகத்தில் எந்தப் பொருளையும் தொடுவதற்கு அனுமதிக்க படமாட்டார்கள். அதிலும் குறிப்பாக அருங்காட்சியகத்தில் `புகைப்படங்களுக்கு அனுமதி இல்லை' என்ற மிகப்பெரிய அறிவிப்பு பலகை மட்டும் தான் இருக்கும்.

ஆனால், இந்த செல்ஃபி அருங்காட்சியகத்தில் உங்கள் விருப்பப்படி எப்படி வேணுமானாலும் எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப பல செயற்கை மாதிரிகள் இங்கே உண்டு.

``இதுக்கெல்லாம் ஒரு மியூசியமா?'' எஎன டாமி ஹான்டனிடம் அந்நாட்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?. ``செல்ஃபி என்பது இந்த நூற்றாண்டில் இருக்கும் ஒன்று என்ற தவறான எண்ணம் நமக்கு உண்டு. ஆனால், இது நம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால் இன்று மொபைலில் பதிவுசெய்கிறோம். இதையேதான் அந்நாளில் கைப்பட வரைந்திருக்கிறார்கள். அதையும் நாங்கள் சேகரித்துவைத்துள்ளோம். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவைத்த இது, முக்கியமான ஒன்றுதான்" அவர்களிடம் தெரிவித்துள்ளார் டாமி. 

சுமார் 8000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், `faux skyscraper' - அதாவது 20 மாடிக் கட்டடம் மாதிரி 3D-யில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிலத்தில் நின்று கொண்டே உயரமான மாடியில் நின்று புகைப்படம் எடுப்பது போல் முகபாவனைகளைக்கொண்டு அசத்தல் செல்ஃபி எடுக்கலாம்.

பெண்கள் அதிக நேரத்தைச் செலவிடும் இடம், ஒப்பனை அறை. காரணம், அங்கு உள்ள கண்ணாடி மற்றும் கையில் உள்ள மொபைல் போன். தங்களை வித விதமாக மெருகேற்றி டங் அவுட், பவுட் எனப் பலவிதமான முகபாவனைகளைச் செய்து `ஒப்பனை அறையை' செல்ஃபி-யின் பிறப்பிடமாகவே மாற்றிவிட்டனர். இந்த அருங்காட்சியகத்தில் பிரதிபலிப்பில்லாத மாயை உருவாக்கி, `பாத்ரூம் செல்ஃபி' ஏரியாவை உருவாக்கியுள்ளனர்.

கார் பிரியர்களுக்காக சூப்பர் மாடல் `ஃபோக்ஸ்வேகன் பீட்டில் (Volkswagen Beetle) காரின் மாதிரியும் வடிவமைப்பட்டுள்ளது. Darel Carey எனும் ஓவியரின் கைவண்ணத்தில் உருவான `ஆப்டிகல் எலெக்ட்ரிக்கல் டேப் இல்லூஷன்', வித்தியாசமான செல்ஃபி பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

செல்ஃபி எடுக்கிறதுல நான் ராஜா/ராணி' என்று சொல்பவர்களுக்கு, இங்கு சிம்மாசனமே உள்ளது. முழுக்க முழுக்க `Selfie Stick' மற்றும் மொபைல் போன்களைக் கொண்டு உருவான அரியணை இது. மேலும் விசித்திரமான சுவாரஸ்யமான சில உடைமைகளும் இங்கே உள்ளன.

Trending News