பாகிஸ்தானில் பெரும் பதற்றம்.. ராணுவ தலைமையகத்தை தாக்கும் இம்ரான் ஆதரவாளர்கள்!

பாகிஸ்தான் இராணுவ  தலைமையகத்தின் மீது இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெஷாவர் கன்டோன்மென்ட்டுக்குள் நுழைந்து ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2023, 10:05 PM IST
பாகிஸ்தானில் பெரும் பதற்றம்.. ராணுவ தலைமையகத்தை தாக்கும் இம்ரான் ஆதரவாளர்கள்! title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்ட சம்பவம் தெற்காசிய நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் போராட்டக்காரர்கள் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தளபதிகளின் வளாகத்திற்குள் நுழைந்ததாக இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் பல பாகிஸ்தான் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இராணுவ  தலைமையகத்தின் மீது இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெஷாவர் கன்டோன்மென்ட்டுக்குள் நுழைந்து ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

முன்னதாக "இம்ரான் கானின் கைதுக்கு எதிரான முதல் எதிர்வினை இராணுவத் தலைமையகத்தை நோக்கி ஒரு பெரிய ஊர்வலம் செல்வது, அங்கு வன்முறை மற்றும் கொலைகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இம்ரான் கான் ஒரு போலீஸ்/இராணுவ வேனில் தள்ளப்பட்டபோது கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருந்தார். அவரது வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டனர் என ஷாஹீன் செபாய் என்ற பத்திரிகையாளர் ட்வீட் செய்துள்ளார்.

லாகூரில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரியின் வீட்டுக்குள் பிடிஐ ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரத்தின் முழுமையான இடமான ராவல்பிண்டியில் மக்கள் இராணுவத்தின் தலைமையகத்தை  தாக்குகிறார்கள். பத்திரிக்கையாளர் முர்தாசா அலி ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "லாகூர் கான்ட்டில் உள்ள ராணுவ அதிகாரியின் வீட்டிற்குள் பிடிஐ ஆதரவாளர்கள் புகுந்தனர்" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டததை அடுத்து, அவரது ஆதராவாளர்கள் குழு ஒன்று, அவர்களில் சிலர் முகத்தை ஓரளவு மூடிக்கொண்டு, கம்புகளுடன் நுழைவாயிலுக்குள் நுழைவதைக் காட்டும் வீடியோவையும் பத்திரிக்கையாளர் பகிர்ந்துள்ளார். பின்னர் அவர்கள் கம்புகளைப் பயன்படுத்தி சுவரில் தாக்கினர். சீருடை அணிந்த ஆண்களையும் வளாகத்தில் காணலாம். ஒரு காலத்தில் பாகிஸ்தானை நிறுவிய ஜின்னாவின் இல்லமாக இருந்த லாகூர் கார்ப்ஸ் கமாண்டர்ஸ் ஃப்ளாக் ஸ்டாஃப் ஹவுஸை இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கினர்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது! நாடு முழுவதும் அதிகரிக்கும் பதற்றம்!

கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த பிடிஐ தொண்டர்கள், இம்ரான் கைதுக்கு எதிராக மாகாணக் கட்சித் தலைவர் டாக்டர் முஹம்மது இக்பால் தலைமையில் லக்கி மார்வாட் மாவட்டத்தின் தெருக்களில் திரண்டனர். பிடிஐ ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிந்து நெடுஞ்சாலையை மூடினர்.

லாகூரில், செனட்டர் இஜாஸ் சவுத்ரி தலைமையில் பிடிஐ ஆதரவாளர்கள் லிபர்ட்டி சவுக்கில் கூடினர். அக்பர் சௌக், பெக்கோ ரோடு, மெயின் கேனால் ரோடு மற்றும் பைசல் டவுன் ஆகிய இடங்களையும் கட்சி தொண்டர்கள் மூடிவிட்டதாக டான் பத்திரிக்கை செய்தியாளர் கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை எரித்தும், கூட்டணி அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இம்ரானின் ஜமான் பார்க் இல்லத்திற்கு வெளியே, பிடிஐ ஆதரவாளர்கள் அரசு பேனர்களையும் கிழித்துள்ளனர்.

கராச்சியில், பிடிஐ எம்என்ஏ மற்றும் எம்பிஏக்கள் சாலைகளை மறித்ததால் ஷேரியா பைசலின் இரு பாதைகளும் அடைக்கப்பட்டன. பெஷாவரின் ஹஷ்ட்நாக்ரியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாக அறிவிக்கப்பட்டது. பழைய சப்ஜி மண்டி, பனாரஸ் சௌக் மற்றும் அல்-ஆசிஃப் சதுக்கத்திற்கு அருகில் உள்ள பிரதான பல்கலைக்கழக சாலையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக டான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெஷாவரில் பிடிஐ ஆதரவாளர்களால் கடைகளின் ஷட்டர்கள் மூடப்பட்டன. மேலும், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பஞ்சாப் மாகாணம் மற்றும் இஸ்லாமாபாத் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. குவெட்டாவில் உள்ள கண்டோன்மென்ட் பகுதிக்கு வெளியே உள்ள அஸ்காரி சோதனைச் சாவடிக்கு அருகேயும் பிடிஐ எதிர்ப்பாளர்கள் கூடினர் என்று டான் செய்தி வெளியிட்டுள்ளது. செவ்வாயன்று அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் கான் கைது செய்யப்பட்டார், நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!

மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News