உற்று கவனித்துக் கொண்டிருக்கிறோம்! கேஜ்ரிவால் கைது தொடர்பாக மீண்டும் கருத்து சொன்ன அமெரிக்கா!

Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா - அமெரிக்கா அறிக்கைப் போர்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 28, 2024, 01:36 PM IST
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்
  • இந்தியா - அமெரிக்கா அறிக்கைப் போர்
  • கேஜ்ரிவால் கைது தொடர்பாக மீண்டும் கருத்து சொன்ன அமெரிக்கா
உற்று கவனித்துக் கொண்டிருக்கிறோம்! கேஜ்ரிவால் கைது தொடர்பாக மீண்டும் கருத்து சொன்ன அமெரிக்கா! title=

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி அமெரிக்கா மீண்டும் பேசுகிறது. முடக்கப்பட்ட காங்கிரஸ் கணக்குகளைப் பற்றியும் அமெரிக்க அரசு குறிப்பிடுள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது உட்பட எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது என முக்கியமான நடவடிக்கைகளை தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்தார்.

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது தொடர்பாக அமெரிக்காவின் கருத்துக்களை அடுத்து, அமெரிக்க தூதரக அதிகாரியை இந்தியா வரவழைத்து பேசிய பிறகு, “நியாயமான, வெளிப்படையான, சரியான நேரத்தில் சட்ட நடைமுறைகள்” தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியது.

டெல்லி அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தலைவர் குளோரியா பெர்பெனாவை இந்திய அரசு அழைத்தது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.  

முன்னதாக, நேற்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சவுத் பிளாக் அலுவலகத்தில் அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தலைவர் குளோரியா பெர்பெனாவுடன் அதிகாரிகள் சுமார் 40 நிமிடங்கள் பேசினார்கள். அப்போது, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது குறித்த அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தென் சீனக் கடல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "இந்தியாவில் தேர்தல் நடைபெறும்போது, எதிர்கட்சிகள் திறம்பட பிரச்சாரம் செய்வதை முடக்கும் வகையில் வரி அதிகாரிகள் சில வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் அறிவோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறைகளை மேற்கொள்வதை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என்றும் மில்லர் தெரிவித்தார். 

இந்திய அரசு அதிகாரிகள், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தலைவர் குளோரியா பெர்பெனாவுடன் மேற்கொண்ட தனிப்பட்ட அரசு ரீதியிலான உரையாடல்களைப் பற்றி பேசப் போவதில்லை என்று குறிப்பிட்ட மில்லர், ஆனால் அமெரிக்கா சொன்ன கருத்து என்பது பகிரங்கமாகச் சொல்லப்பட்ட கருத்து. நியாயமான, வெளிப்படையான, சரியான நேரத்தில் சட்டச் செயல்முறைகள் தேவை என்று தான் சொல்லப்பட்டது, அதற்காக, நாங்கள் இந்திய அரசின் நடவடிக்கைகலை எதிர்க்கிறோம் என்று நினைக்க வேண்டாம் என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க - குடியுரிமை திருத்தச் சட்டம்: 'உரிமைகள் பறிப்பு' பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்

டெல்லி முதலமைசர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்ததற்கு கருத்து தெரிவித்திருந்த ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், நியாயமான விசாரணை கிடைக்க அவருக்கு உரிமை உண்டு என கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினரால் அதிகம் பகிரப்பட்ட நிலையில், ஜெர்மன் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

பிற நாடுகளின் விவகாரத்தில் ஜெர்மன் இவ்வாறு கருத்து சொல்வதௌ என்பது, இந்தியாவின் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாக இருப்பதாக கண்டித்த இந்தியா, இது இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகும் என்று கூறி, அறிக்கை வாயிலாகவும் கண்டனங்களை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆம் ஆத்மி காட்சிக்கு தொடரும் சோதனை: முக்கிய கட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியது ED

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News