டிரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிராக வர்த்தகம், திபெத் மற்றும் தைவான் என பல முனைகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) தலைமையிலான ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPC) எதிராக கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
டிரம்ப் அதிபராக இருந்த போது, அமெரிக்க சீனா உறவுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
சென்ற ஆண்டும் நவம்பர் 8 நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பை தோற்கடித்த ஜோ பைடன், ஜனவரி 20 ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன் (Joe Biden) வந்தால் அமெரிக்கா உடனான பனிப்போர் முடிவுக்கு வரும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் (Donald Trump) போல் அல்லாமல், ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் விவேகமான அணுகுமுறையுடன், சீனாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் என்றும், இதனால் இருதரப்பு உறவுகள் இயல்புநிலைக்கு வ்ந்து, ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று சீனத் தரப்பு நம்புகிறது.
ஜோ பிடன் இந்த மாதம் ஆட்சியை ஏற்கவுள்ள நிலையில், அமெரிக்கா சீனா (China) இடையில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடுத்து வரும் பனிப்போர் முடிவுக்குக் கொண்டு வந்து, உறவுகள் இயல்பாகும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi ) சனிக்கிழமை நம்பிக்கை வெளியிட்டார்.
ரஷ்யாவுடனான சீனாவின் உறவு வளர்ந்து வரும் நிலை குறித்து வாங் மகிழ்ச்சி வெளியிட்டார்.
சீனாவும் ரஷ்யாவும் முக்கிய நாடுகளுக்கிடையேயான சிறந்த நட்புறவுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும், இது உலகளாவிய மூலோபாய ஸ்திரத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கும் என்று வாங் கூறினார்.
ALSO READ | பிடிவாதம் பிடிக்கும் டிரம்ப்.. வீட்டோ அதிகார முடிவை நிராகரித்த நாடாளுமன்றம்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR