Donald Trump ஒரு வழியாக பிடிவாதத்தை விட்டு நிவாரண திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததன் காரணமாக, ஒப்புதல் அளிக்க மனமில்லாமல், ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி, பழி வாங்குகிறாரோ என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 28, 2020, 05:41 PM IST
  • கொரோனா நிவாரண திட்டம், வேலை இல்லாத அமெரிக்கர்களுக்கு 600 டாலர் நிதி அளிக்க பரிந்துரைக்கிறது.
  • அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததன் காரணமாக, பழி வாங்குகிறாரோ என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
  • இதனால் அமெரிக்காவில் குழப்பமான சூழ்நிலை உருவானது.
Donald Trump ஒரு வழியாக பிடிவாதத்தை விட்டு நிவாரண திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் title=

கொரோனாவினால், உலகிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள அமெரிக்காவில், பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் உள்ளது. பலர் வேலையை இழந்ததோடு, நோய் தொற்று காரணமாக, அதிக அளவில் பணம் செலவழிக்க நேர்ந்ததால், மக்கள் நிதி பற்றாக்குறையினால், அவதிப்படுகின்றனர். 

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கொரோனா நிவாரண நிதியாக சுமார் 66 லட்சம் கோடி வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த ஆண்டின் இறுதியில் தர வேண்டிய COVID-19 நிவாரண நிதிக்கான ஒப்புதலில் கையெழுத்திட மாட்டேன் என டிரம்ப் (Donald Trump) முரண்டு பிடித்தார்.

இந்த கொரோனா நிவாரண திட்டம், வேலை இல்லாத அமெரிக்கர்களுக்கு 600 டாலர் நிதி அளிக்க பரிந்துரைக்கிறது. டிரம்ப் இதை மிகவும் குறைவான தொகை எனக் கூறி $ 600 என்ற $ 2,000 அல்லது $4,000 ஆக உயர்த்துமாறு கூறி, அதை திருத்தி அமைக்குமாறு கூறினார்.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததன் காரணமாக, ஒப்புதல் அளிக்க மனமில்லாமல், ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி, பழி வாங்குகிறாரோ என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 

ALSO READ | அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பழி வாங்குகிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!!

இதனால் அமெரிக்காவில் குழப்பமான சூழ்நிலை உருவானது. அமெரிக்க அதிபராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும் (Joe Biden) டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். பல சட்ட நிபுணர்களும் டிரம்பின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.

இதையடுத்து, ஒரு வழியாக டிரம்ப் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக அமெரிக்க மக்களுக்கு பெருமளவு நிவாரணங்கள் கிடைக்கும்.

இந்த நிவாரண திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு ரூ.4½ லட்சம் வரை நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | வேக்ஸின் வரலைன்னா ராணுவ ஒப்பந்தமும் இருக்காது.. அமெரிக்காவை மிரட்டும் பிலிபைன்ஸ்.. !

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News