அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பழி வாங்குகிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!!

டொனால்ட் டிரம்ப் கையெழுத்திடாததால் வேலையில்லாத லட்சக்கணக்காணவர்களுக்கு கொடுக்கும் உதவித் தொகை கொடுக்கப்படாமல் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 27, 2020, 07:10 PM IST
  • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜோ பிடன், இந்த மசோதாவில் உடனடியாக கையெழுத்திடுமாறு டிரம்பிடம் கேட்டுக் கொண்டார்.
  • டிரம்ப் தனது பொறுப்பை நிறைவேற்ற வில்லை என்று பிடென் குற்றம் சாட்டினார்.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்திருந்தன. ஆனால் டிரம்ப் கையெழுத்திடவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பழி வாங்குகிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!! title=

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தோல்விக்கு பழிவாங்குவதாக தெரிகிறது. இந்த ஆண்டின் இறுதியில் தர வேண்டிய COVID நிவாரணம் மற்றும் செலவுக்கான ஒப்புதலில் கையெழுத்திட டிரம்ப் மறுத்துவிட்டார். இதனால் வேலையில்லாத லட்சக்கணக்காண அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் உதவித் தொகை, மற்றும் பிற நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாமல் உள்ளது. 

முன்னதாக, அதிபர் டிரம்ப் அதில் கையெழுத்திடுவார் என்று நம்பப்பட்டது, ஆனால் திடீரென்று அவர் முரண்டு பிடிக்கிறார்.

டிரம்ப் (Donald Trump) கையெழுத்திட மறுத்ததோடு, அதிக அளவு கோவிட் நிவாரணம் கோரி, இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். இந்த சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பன்னிரண்டு மணி முதல் அரசின் செயல்பாடு நின்று விடும் அபாயமும் உள்ளது.

நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு உறுதியளித்த பின்னர், அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன. இருப்பினும், டிரம்பின் மனநிலை மாறியதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மசோதா வேலை இல்லாத அமெரிக்கர்களுக்கு 600 டாலர் நிதி அளிக்க பரிந்துரைக்கிறது. ஆனால் டிரம்ப் இதை மிகவும் குறைவான தொகை எனக் கூறி $ 600 என்ற $ 2,000 அல்லது $4,000 ஆக உயர்த்துமாறு கூறியுள்ளார்.

அவர், 'இந்த மசோதாவில் இருந்து தேவையற்ற விஷயங்களை அகற்றி, பொருத்தமான மசோதாவை எனக்கு அனுப்பவும்’  எனவும்  நாடாளுமன்றத்தை  கேட்டுக் கொடுள்ளார்
இந்த மசோதாவில் உடனடியாக கையெழுத்திடுமாறு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜோ பிடன் (Joe Biden)  டிரம்பிடம் கேட்டுக் கொண்டார்.

பிடன், "பொருளாதார நிவாரண மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட மறுத்ததால், லட்சக்கணக்கானவர்களுக்கு இப்போது அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய கூட நிதி அனுப்ப முடியவில்லை" என்றார். '

டிரம்ப் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக  குற்றம் சாட்டிய அவரது முடிவு பலரை பாதித்து வருகின்றன என்றார். 

டொனால்ட் டிரம்ப் இப்போது ஊடகங்கள் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். தனது மனைவி மெலனியா (Melania Trump)  மிகவும் அழகானவராக இருக்கும் நிலையிலும், கடந்த 4 ஆண்டுகளில் எந்த பத்திரிகையின் அட்டைப்படத்திலும் அவர் படம் வெளிவரவில்லை என கூறியுள்ளார்.

ALSO READ | பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ள ட்ரம்ப்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News