செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஹஜ் யாத்திரையில் தங்கள் நாட்டினர் கலந்து கொள்ள கூடாது என சவுதி அரேபியா தடை விதித்துள்ளதாக ஈரான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இச்செய்திகளை மறுத்துள்ள சவுதி அரசு, மேலும் அதன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியது எப்பொழுதும் போல விசாவுக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். பிற நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்ப ஈரானியர்களை அனுமதிக்க மாட்டோம். மற்றபடி எந்த நிபந்தனையையும் எந்த தடையும் நாங்கள் விதிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
இஸ்லாம் மதத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரையை. இதனை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்று வழிபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.