Crime: கணவனை கொன்று கூறு போட்டு எலிக்கு உணவளித்த மனைவி

ரஷ்யாவில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்ற தோடு, இறந்த அவரது சடலத்துடன் உடல் உறவு கொண்டுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டு கூறு போட்டு எலிக்கு உணவாக அளித்துள்ளார். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2021, 04:14 PM IST
  • ராப் பாடகரான கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது
  • கணவரின் காதல் விவகாரத்தால் மனைவி கோபமடைந்தார்
  • சடலத்தை துண்டு துண்டாக வெட்டி எலிகளுக்கு உணவளித்தார்.
Crime: கணவனை கொன்று கூறு போட்டு எலிக்கு உணவளித்த மனைவி

மாஸ்கோ: ரஷ்யாவில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்றுள்ளார். அதன் பிறகு இறந்த உடலுடன் உடலுறவும் கொண்டுள்ளார். பின்னர் இறந்த உடலை துண்டு துண்டாக வெட்டி எலிகள்  உணவிட்டார்.

ராப்பர் கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது

37 வயதான மெரினா கோகல் (Marina Kokhal) ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கிறார். மெரினா தனது கணவர் அலெக்சாண்டர் யுஷ்கோவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் ஒரு ராப் பாடகர். பிரபலமான பின், ​​அவர் தனது பெயரை ஆண்டி கார்ட்ரைட் (Andy Cartwright) என்று மாற்றினார். மெரினா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கணவர் கொலைக்காக கைது செய்யப்பட்டார், ஆனால் தற்போது வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

கணவரின் விவகாரத்தால் கோபமடைந்த மனைவி 

ஆண்டி கார்ட்ரைட் 25 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் மெரினா கடும் கோபமடைந்தார். அவர், தனது 68 வயதான தாய் எலெனா கோகலுடன் சேர்ந்து, தனது கணவரை கொடூரமான  தண்டிக்க சதி செய்தார்.

ALSO READ | ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு

கணவரின் சடலத்துடன் உடல் உறவு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த  இன்சுலின் மருந்தை வாங்கி தனது சர்க்கரை நோயாளி கணவருக்கு, மெரினா  கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் கணவர் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் இறந்த பிறகு, மெரினா அவரது சடலத்துடன் உடல் உறவு கொண்டார். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டினார்.

சடலத்தை துண்டாக வெட்டிய கொடூரம் 

கணவரின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த மெரினா ,  பின்னர் எலிகளுக்கு அதனை உணவாக அளிக்க வெளியில் வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது, ​​அங்கிருந்த உடல் உறுப்புகளோ, ரத்தத்தின் தடயங்களோ எதுவும் கிடைக்கவில்லை. கொலைக்குப் பிறகு, மெரினா பிளாட், பாத்திரங்கள் மற்றும் உடைமைகள் முழுவதையும் நன்கு கழுவி சுத்தம் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

மெரினாவை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது 4 வயது மகனை சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவரது விடுதலையை அரசு வழக்கறிஞர்கள் எதிர்த்தனர் ஆனால் நீதிமன்றம் அவர்களின் வாதங்களை நிராகரித்தது. அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கூறிய நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர் வீட்டுக் காவலில் இருப்பார்.

ALSO READ | Weird News: இறந்தவர் சாம்பலில் இருந்து நகைகள் செய்யும் வினோத பெண்மணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News