செசாபீக்: அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் செசாபீக் நகரில் வால்மார்ட் சூப்பர் ஸ்டோரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். கடை மேலாளர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதாக வெர்ஜீனியா மாகாண காவல்துறை, முதல் கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.
வால்மார்ட் கடையில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட அந்த நபர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். தற்போது அவரும் உயிருடன் இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணமோ அல்லது யார் இந்த வன்முறையை நிறைவேற்றியது என்ற தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
மேலும் படிக்க | Firing on Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மக்களிடையே பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
#UPDATE A gunman shot and killed multiple people in a Walmart store in the US state of Virginia, police say, adding that the single shooter suspect is also dead
Read more: https://t.co/tHMTxnKrcx pic.twitter.com/HwtUBEntWk
— AFP News Agency (@AFP) November 23, 2022
இந்த துப்பாக்கி சூடு சம்பவம், கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், இது தொடர்பாக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் வால்மார்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்ச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும் படிக்க | மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ