குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது...ஜெனிஃபர் லோபஸ் உருக்கம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதென பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.  

Written by - Chithira Rekha | Last Updated : May 27, 2022, 11:03 AM IST
  • டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு
  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் பயம்
  • பாடகி ஜெனிஃபர் லோஃபஸ் வேதனை
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது...ஜெனிஃபர் லோபஸ் உருக்கம் title=

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில், 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாடகியும், நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், அந்த அழகான குழந்தைகளுக்கும் அவர்களது ஆசிரியர்களுக்கும் நிகழ்ந்துள்ளதைக் கண்டு தனது இதயம் உடைந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முடிவு?...ஜோ பைடன் வேதனை

நாடு முழுவதும் நடைபெறுகிற இத்தகைய வன்முறைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்களில் தானும் இணைந்து கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குக் கூட பயமாக உள்ளதாகவும், ஜெனிஃபர் லோபஸ் குறிப்பிட்டுள்ளார். சிறு குழந்தைகளை தாக்குவதை விடக் கொடூரமான எதையும் நினைத்துக் கூட பார்க்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், நமக்கு சில தீவிர மாற்றங்கள் அதுவும் உடனடியாகத் தேவை எனவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News