கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே போராடிக் கொண்டிருக்கின்றது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவது இந்த தொற்று நோயை தோற்கடிப்பதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக தைவானில் ஒரு நபர் மீது 3,500 அமெரிக்க டாலர், அதாவது சுமார், ரூ .2,58,329 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளை (Quarantine Rules) அவர் எவ்வளவு நாட்கள் கடைபிடிக்காமல் இருந்தார் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால், அதன் பதில் உங்களை ஆச்சரியப்படுத்தும். எட்டு விநாடிகள் மட்டுமே அவர் இந்த விதிகளை மீறியுள்ளார். இதற்குத்தான் அவருக்கு இந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பிலிப்பைன்ஸிலிருந்து குடியேறிய ஒரு தொழிலாளி, தெற்கு தைவானின் காவ்ஸியுங் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அந்த நபர் ஹோட்டலில் இருந்து வெளியேறியது சி.சி.டி.வி கேமராவில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட ஹோட்டல் ஊழியர்களில் ஒருவர் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்தார். விரைவில் அதிகாரிகள் ஹோட்டலை அடைந்தனர். உடனடியாக, அதிகாரிகள் அந்த நபருக்கு 100,000 தைவான் டாலர் அபராதம் விதித்தனர்.
தைவானில் (Taiwan), தனிமைப்படுத்தல் விதிகள் மிகவும் கண்டிப்பானவையாக உள்ளன. தனிமைப்படுத்தலில் இருக்கும் மக்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இதற்கான விதிகளை மீறினால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ALSO READ: கொரோனா காரணமாக கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவார்கள்: ஐநா
COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதன் அர்ப்பணிப்பு மிகுந்த பணிகளுக்காக தைவான் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடுமையான லாக்டௌனை விதிப்பதில், தைவான் அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டது. இந்த துரித நடவடிக்கைகள், தொற்றுநோயை சிறந்த முறையில் கட்டுப்படுத்த தைவானுக்கு உதவின.
கொரோனா வைரஸின் (Coronavirus) பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உலகம் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், வூஹானில் (Wuhan) இருந்து நேரடி விமானங்களில் வரும் பயணிகளுக்கு தொற்றுக்கான சோதனையைச் செய்த முதல் நாடானது தைவான். சீனாவின் வுஹானில்தான் கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 30 நிமிடங்களில் COVID test result-ஐ தருகிறது இந்த மொபைல் அடிப்படையிலான செயல்முறை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR