ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரிய நாடாக உள்ள சூடானில் (Sudan), பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தை கடைப்பிடிப்பவர்கள். இந்நிலையில் அங்கே பெரிய அளவில் ராணுவ புரட்சி வெடித்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஓமர் அல்-பஷீர் (Omar al-Bashir ) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பதவி விலகியதில் இருந்தே அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஓமர் அல் பஷீர் பதவி விலகிய பிறகு, அங்கே பொதுமக்களும் ராணுவமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு அப்துல்லா ஹம்டொக் (Abdalla Hamdok) என்பவர் பிரதமராக பதவியேற்றார். ஆனால், இப்போது ராணுவ, நாட்டின் முழு கட்டுப்பட்டையும் எடுத்துக் கொள்ள விரும்புகிறது. இதை அடுத்து அனைத்து இடங்களிலும் ஆட்சிக்கு எதிராக, போராட்டங்கள் நடந்தன
ALSO READ | ISI toolkit: காஷ்மீரை இன்னொரு காபூலாக மாற்ற பாகிஸ்தான் சதி..!!!
இந்நிலையில், சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டொக், ராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவருகிறது. பிரதமர் மட்டுமல்ல பல உயர் அரசாங்க அதிகாரிகள் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும், ஆட்சியை கைப்பற்ற ராணுவம் மேற்கொள்ளும் சதி நடவடிக்கைகள் என தகவல் அமைச்சகம் கூறியுள்ளது.
அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதமேந்தியவர்கள் பொது மக்கள் பயன்படுத்தும் பாலங்களில் யாரும் போக முடியாமல் குறுக்கே நின்று காவல் காத்து வருகின்றனர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் அப்தல்லா ஹம்டாக் எங்கே இருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. நாட்டின் முக்கிய ஜனநாயக சார்பு அமைப்பும், நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியும் குடிமக்களை இராணுவ சதிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வீதிகளுக்கு வருமாறு, தனித்தனியாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
அக்டோபர் 25, 2021 அன்று அட்சியாளர்களை இராணுவம் ஒரே இரவில் கைது செய்துள்ளதை கண்டித்து, தலைநகர் கார்டூமில் உள்ள 60 வது தெருவில் சூடான் போராட்டக்காரர்கள் தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதையும், டயர்களுக்கு தீ வைப்பதையும் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ALSO READ | ஆபத்தில் ஆப்கானிஸ்தான்: பணம், நிலம் தந்து தற்கொலைத் தாக்குதலை ஊக்குவிக்கும் தாலிபான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR