Kim jong Un வினோத உத்தரவு... சீனாவிலிருந்து வரும் மர்ம 'கொரோனா தூசி', வீட்டிலேயே இருங்கள்..!!

வட கொரியாவின் விசித்திரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நிர்வாகம் சீனாவிலிருந்து மர்மமான முறையில் மஞ்சள் தூசி பறந்து வருவதாகவும், அது நாட்டில் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Last Updated : Oct 24, 2020, 09:47 AM IST
  • அதிபர் கிம் ஜாங் உன், மர்மமான தலைவர் என்பதோடு, விசித்தரமான ஆணைகளின் நாயகன்.
  • உலகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்தியுள்ள வட கொரியா, கொரோனா வைரஸ் தனது நாட்டில் இல்லவே இல்லை என்று கூறியது.
  • பியோங்யாங்கில் வசிக்கும் வெளிநாட்டு இராஜீய துறை பணியாளர்களும் வீட்டில் தங்கி இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை ரஷ்ய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Kim jong Un வினோத உத்தரவு... சீனாவிலிருந்து வரும்  மர்ம 'கொரோனா தூசி', வீட்டிலேயே இருங்கள்..!! title=

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) , மர்மமான தலைவர் என்பதோடு, விசித்தரமான ஆணைகளின் நாயகன். தற்போது அவர் விதித்துள்ள புதிய ஆணையில்,  சீனாவிலிருந்து வரும் மர்மமான மஞ்சள் நிற 'கொரோனா தூசி' குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வட கொரியா குடிமக்களை எச்சரித்துள்ளார்.  சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி நாட்டில் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்று வட கொரியா கூறியுள்ளது.

வட கொரியாவின் (North Korea) விசித்திரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நிர்வாகம் சீனாவிலிருந்து மர்மமான முறையில் மஞ்சள் தூசி பறந்து வருவதாகவும், அது நாட்டில் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மஞ்சள் தூசியிலிருந்து கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்கள் வீட்டுக்குள் தங்கி ஜன்னலை மூடி வைக்க வேண்டும் என்று வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க | Kim Jong Un: புலி பதுங்கியது எதற்கு? “Sorry" -க்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?

உலகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்தியுள்ள வட கொரியா, கொரோனா வைரஸ் தனது நாட்டில் இல்லவே இல்லை என்று கூறியது. ஆனால் தற்போது, கொடிய கொரோனா வைரஸ் காற்றில் இருந்து பரவலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பியோங்யாங்கின் சாலைகள் வெறிச்சோடியிருந்தன. மக்கள் கிம் ஜாங் உன்னின் உத்தரவை முழுமையாக பின்பற்றியதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு

மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது மற்றும் அத்தியவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். மக்கள் வெளியே செல்லும் போதெல்லாம், முகமூடி அணிந்து செல்ல வேண்டும், ஜன்னலை மூடி வைக்க வேண்டும் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டது. பியோங்யாங்கில் வசிக்கும் வெளிநாட்டு இராஜீய துறை பணியாளர்களும் வீட்டில் தங்கி இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை ரஷ்ய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | வட கொரிய வரலாறு முக்கியம் அமைச்சரே... பாசமலர் தங்கையின் அதிரடி உத்தரவு..!!!
 

Trending News