Ecuador: 100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் காவு வாங்கிய கொடூரக் கலவரம்

எக்குவடோரில் செவ்வாயன்று நடந்த கலவரத்தில் ஆரம்பத்தில் 30 பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கலவரங்களில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 05:39 PM IST
Ecuador: 100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் காவு வாங்கிய கொடூரக் கலவரம் title=

எக்குவடோரில் சமீபத்தில் நடந்த சிறை கலவரம் அதன் கொடூர தாக்குதல்களுக்காகவும் கொடூரத்திற்காகவும் நினைவுகூரப்படும். அங்கு செவ்வாயன்று நடந்த கலவரத்தில் ஆரம்பத்தில் 30 பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கலவரங்களில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இறப்புகள் மட்டுமல்லாமல், ஈக்வடாரில் உள்ள லிட்டரல் பெனிடென்ஷியரியில் நடந்த மோதலில் 52 பேர் படுகாயமடைந்தனர்.

சிறைச்சாலைகளுக்கு (Prison) பொறுப்பான ஈக்வடார் அரசு நிறுவனமான, National Service for Comprehensive Attention to Adults Deprived of Liberty and Adolescent Offenders (SNAI), ட்விட்டரில், “@SNAI_Ec அறிக்கைப்படி, செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவங்களின் காரணமாக, இதுவரை 100 க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளது.

ALSO READ: பிரமிடுகளை உருவாக்கியது யார்? அவற்றின் பின்னணி!

இந்த ஆண்டு எக்குவடோரில் (Ecuador) நடந்த இரண்டாவது கொடிய சிறை கலவரமான இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது. சிறைச்சாலைகள் குறித்த மிகப்பெரிய நெருக்கடி நிலையை எக்குவடோர் சந்தித்து வருகிறது. எக்குவடோர் தேசிய போலீஸ் மற்றும் எக்குவடோர் வழக்கறிஞர் அலுவலகம் உள்ளிட்ட ஏஜென்சிகள் இந்த தாக்குதல்களை பற்றிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக பிப்ரவரி 2020 இல் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில், 4 சிறைச்சாலைகளில் 79 கைதிகள் இறந்தனர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிப்ரவரி கலவரத்தில் போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயன்று நடந்த கொடிய சிறை கலவரத்திற்குப் பிறகு, எக்குவடோர் அதிபர் கில்லர்மோ லாசோ இதுபோன்ற கலவரங்களைத் தவிர்ப்பதற்காக நாட்டின் சிறைச்சாலைகள் அனைத்திலும் 60 நாட்களுக்கான அவசரகால நிலையை அறிவித்தார்.

ALSO READ: மிகப்பெரிய மலையின் நடுவில் ஒரு பிரமாண்டசிலை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News