திவாலாகும் நிலையிலும் விடாத காஷ்மீர் மோகம்... OIC கூட்டத்தில் பிதற்றும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) காஷ்மீருக்காக பாகிஸ்தான் எப்போதும் குரல் எழுப்பும் என கூறியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2023, 02:30 PM IST
  • பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு காஷ்மீர் மீதான காதல் குறையவில்லை
  • காஷ்மீரும் பாகிஸ்தானும் புவியியல், நம்பிக்கை, கலாச்சாரம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்னையை வலுவாக எழுப்ப பாகிஸ்தான் தவறிவிட்டது.
திவாலாகும் நிலையிலும் விடாத காஷ்மீர் மோகம்... OIC கூட்டத்தில் பிதற்றும் பாகிஸ்தான்! title=

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதோடு பயங்கரவாத தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காஷ்மீர் மீதான் பேராசை குறையவில்லை. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் பேச்சு இதனை மீண்டும் உறுதி படுத்தியுள்ளது. காஷ்மீர் குறித்து பிலாவல் மீண்டும் ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். இம்முறை அவர் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் (OIC) தளத்தை இதற்காக தேர்வு செய்துள்ளார். காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டத்திற்கு பாகிஸ்தான் எப்போதும் இராஜதந்திர, அரசியல் மற்றும் தார்மீக ஆதரவை வழங்கும் என்று பிலாவல் இந்த மன்றத்தில் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) காஷ்மீர் பிரச்னையை வலுவாக எழுப்ப பாகிஸ்தான் தவறிவிட்டது என்பதை பிலாவல் சில நாட்களுக்கு முன்பு ஏற்றுக்கொண்டார். OIC அமைப்பில், பிலாவல் மீண்டும் காஷ்மீருக்கான பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை குறிப்பிட்டார்.

பாகிஸ்தானும் காஷ்மீரும் ஒன்றுதான்

OIC அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார். இம்முறை வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரிடானியா நாட்டில் நடைபெற்றது. இங்கு பேசிய பிலாவல்,  ‘காஷ்மீரும் பாகிஸ்தானும் புவியியல், நம்பிக்கை, கலாச்சாரம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டத்திற்கு பாகிஸ்தான் எப்போதும் அரசியல், இராஜதந்திர மற்றும் தார்மீக ஆதரவை வழங்கும். ஜம்மு காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கொண்டு வந்துள்ளதாக பிலாவல் தெரிவித்தார். இதன் கீழ் இங்கு வாக்கெடுப்பு நடத்த மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்றார்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் நெருக்கடி... குறைந்தபட்ச கடனாவது தாங்க... கையேந்தும் பாகிஸ்தான்!

இந்தியாவால் ஏமாற்றப்பட்டோம்

கஷ்மீருக்கான திட்டத்தை செயல்படுத்த இந்தியா தவறிவிட்டது என்றார். பிலாவல் நம்புவதாக இருந்தால், மோசடி மூலம் இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது. ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இந்தியாவின் காலனித்துவ விரிவாக்கத் திட்டம் தோல்வியடைந்தது என்பது தெளிவாகிறது.

இந்தியாவுடன் சமாதானம் சாத்தியமில்லை

இந்தியா தனது குறிக்கோளில் ஒருபோதும் வெற்றிகொள்ளாது என்று பாகிஸ்தான் வெளியுறவி அமைச்சர் பிலாவல் கூறினார். காஷ்மீரிகளின் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான குரலை ஒருபோதும் நசுக்க முடியாது. அமைப்பு மீண்டும் கூடும் போது, ​​காஷ்மீர் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பயனுள்ள திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று OIC யின் தொடர்பு குழுவிடம் பிலாவல் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிலாவல் இத்துடன் நின்றுவிடவில்லை, இந்தப் பிரச்னையை தீர்க்காமல் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி சாத்தியமில்லை என்றார்.

மேலும் படிக்க | தன் வினை தன்னை சுடும்.... பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News