அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் பொருளாதாரத் தடைகள் விதிப்பதன் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். முன்னதாக,10 ரஷ்ய அதிகாரிகளை தடை செய்து அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எப்.பி.ஐ (FBI) இயக்குனர் கிறிஸ்டோபர் ரே (Christopher Wray) உட்பட எட்டு முக்கிய அமெரிக்க அதிகாரிகளுக்கு மாஸ்கோ தடை விதித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகவும், அமெரிக்க கூட்டாட்சி அமைப்புகளில் ஊடுருவ ரஷ்யா முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியதோடு, ரஷ்யாவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ALSO READ | ரஷ்யாவில் "விஷ" அரசியல்... சதியில் Vladimir Putin-க்கு தொடர்பு உள்ளதா ..!!!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) ஆதரவாகவும், அப்போதைய துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு (Kamala Harris) எதிராகவும் நடந்து கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியை (Alexei Navalny) சிறையில் அடைக்க கிரெம்ளின் எடுத்த முடிவு ஆகியவை தொடர்பாக இரு நாட்டு உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
அதே போன்று, கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் அரசுத்துறை நிறுவனங்க்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், ரஷ்யா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சென்ற மாதம் தொலைக்காட்சியில் ஒன்றில் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) ரஷ்ய தலைவரை ஒரு 'கொலையாளி' என்று வர்ணித்தார். இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனால், கடுப்பான ரஷ்யா அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் (Anatoly Antonov) திரும்ப அழைத்துக் கொண்டது.
ALSO READ | ஜோ பைடனின் கொலையாளி கமெண்ட் எதிரொலி; மாஸ்கோ திரும்பிய ரஷ்ய தூதர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR