போரால் தொடரும் உயிரிழப்புகள்! ரஷ்யாவின் அண்மை தாக்குதலில் நால்வர் பலி

Russia Ukraine War: தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்கள்! உக்ரைன் உணவகத்தின் மீதான தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்தனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2023, 06:26 AM IST
  • ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள்!
  • ஹோட்டலில் தாக்குதல் நடத்திய ரஷ்யா
  • நால்வர் பலி 22 பேர் காயம்
போரால் தொடரும் உயிரிழப்புகள்! ரஷ்யாவின் அண்மை தாக்குதலில் நால்வர் பலி title=

உக்ரைன் உணவகம் மீது ரஷ்ய தாக்குதல்களளில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள உணவகம் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன.

"இரண்டு பேர் இறந்தனர் மற்றும் ஒரு குழந்தை உட்பட 22 பேர் காயமடைந்தனர். ஒரு உணவகம் மற்றும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன" என்று என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் இகோர் க்ளைமென்கோ தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் இருக்கலாம் என்ற சந்தேகத்தால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

தாக்குதல் நடைபெற்ற ரியா பிஸ்ஸா உணவகத்தில் இரண்டு நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த யெவ்ஜென் என்பவர் தாக்குதல் தொடர்பாக பேசியபோது, அந்த சமயத்தில் உணவகத்தில் பலர் இருந்ததாகவும், அதிலும் குழந்தைகள் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.  

மேலும் படிக்க | ஒரே நாளில் இளமையாகும் தென் கொரிய மக்கள்! அதிபர் உத்தரவினால் நடக்கும் அதிசயம்!

"நாங்கள் வெளியேறவிருந்தோம்," என்று அவர் கூறினார், ஆனால் அவரது நண்பர்களில் ஒருவர் "இடிபாடுகளுக்கு அடியில்" இல்லை, குண்டுவெடிப்புக்குப் பிறகு அவர் AFP இடம் கூறினார்.

AFP அறிக்கைகளின்படி, தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு, உடனடியாக வந்த மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டாலும், தீ வெகுநேரம் வரையில் எரிந்துக் கொண்டிருந்தது.  

150,000 மக்கள் வசிக்கும் நகரமான டொனெட்ஸ்க்கை, இரண்டு ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கியதாக அந்த நகரத்தின் ஆளுநர் தெரிவித்தார். இந்த நகரம், ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட கிழக்கு உக்ரைன் நகரம், இது உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்.

இந்தத் தாக்குதலில், உணவகம் மற்றும் அருகிலுள்ள பல கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வூஹான் ஆய்வகத்தில் உருவானதா கொரோனா வைரஸ்? ஆதாரங்கள் இல்லை! கைவிரித்த அமெரிக்கா

இந்நிலையில், தைவானின் கிழக்குக் கடற்கரையில் இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்களைக் கண்டதாக, தைவான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (2023, ஜூன் 27) தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம், உடனடியாக கண்காணிப்புக்காக விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இரண்டு போர் கப்பல்களும் தைவானின் கிழக்கு கடற்கரையிலிருந்து வடக்கு திசையில் பயணித்ததாகவும், பின்னர் தைவானின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்துள்ள துறைமுக நகரமான சுவாவிலிருந்து தென்கிழக்கு திசையில் புறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான மற்றொரு தகவலின்படி ரஷ்ய பசிபிக் கடற்படையின் கப்பல்களின் ஒரு பிரிவினர் நீண்ட தூர கடல் பாதையின் ஒரு பகுதியாக பணிகளைச் செய்வதற்காக பிலிப்பைன்ஸ் கடலின் தெற்குப் பகுதிகளுக்குள் நுழைந்தது.

இந்த செய்தியை ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதால், தைவானுக்கு அருகில் சென்ற போர்க்கப்பல்கள் தொடர்பான விளக்கமாக சர்வதேச அளவில் இது பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக பரந்த அளவிலான பொருளாதாரத் தடைகளை இயற்றுவதில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் இணைந்துள்ளது தைவான். 

மேலும் படிக்க | கலகத்தில் இருந்து தப்பித்த ரஷ்யா... கை கொடுத்த பெலாரஸ் அதிபர்... நடந்தது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News