பொதுவாக காலப்போக்கில், அனைவரின் வயதும் அதிகரிக்கிறது, ஆனால் தென் கொரியாவில், இதற்கு நேர்மாறாக நடக்கிறது. அதற்கு அதிபர் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவே காரணம். சமூக மற்றும் நிர்வாகக் குழப்பங்களை தவிர்க்க தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் வயதைக் கணக்கிட சர்வதேச முறையை ஏற்றுக்கொண்டுள்ளார். மத்திய சியோலில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அரசாங்க சட்ட அமைச்சர் லீ வான் கியூ இதனைத் தெரிவித்தார். தென் கொரியாவின் பல்வேறு வயது அமைப்புகளை ஒன்றிணைக்கும் சட்ட திருத்தங்களை தேசிய சட்டமன்றம் கடந்த டிசம்பரில் நிறைவேற்றியது. இது 2023 ஜூளை முதல் அமலுக்கு வருகிறது.
மூன்று வழிகளில் கணக்கிடப்படும் வயது
தென் கொரிய அரசாங்கம் அதன் குடிமக்களின் வயதைக் கணக்கிடுவதற்கான புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. வயதைக் கணக்கிடும் முறையை சீராக்குவதே அரசின் நோக்கமாக இருந்தது. தற்போது, தென் கொரியாவில் வயது மூன்று வழிகளில் கணக்கிடப்படுகிறது. ஒன்று சர்வதேச வயது, இரண்டாவது கொரிய வயது மற்றும் மூன்றாவது காலண்டர் வயது. மூன்று வழிகளில் வயதை அளவிடுவதால், சில நேரங்களில் குழப்பம் எழுகிறது. இதை இப்போது நீக்க, அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது இப்போது இந்த சட்டத்தின் கீழ், 2023 ஜூலை முதல் அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் நிலையான சர்வதேச வயதைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதாவது, மூன்று வகையில் வயதை குறிப்பிடுவதற்கு பதிலாக, ஒரு வயது மட்டுமே எழுத வேண்டிய அவசியம் ஏற்படும்.
வயதை கணக்கிடும் கொரிய முறை
கொரிய முறையின் கீழ், ஒரு குழந்தை பிறந்தால், அதன் வயதை ஒரு வருடமாக அங்குள்ளவர்கள் கருதுகின்றனர். அதாவது, குழந்தை பிறந்து 12 மாதங்கள் நிறைவடையும் போது, உலகின் பிற பகுதிகளைப் போல, அதற்கு 1 வயது என இருக்காது, ஆனால் 2 வயதாக இருக்கும். இதுமட்டுமின்றி, நாட்காட்டி முறையில் வயதை கணக்கிடுவார்கள். சர்வதேச மற்றும் கொரிய பாணியின் கலவையாகும். இதில், குழந்தை பிறக்கும் போது, அதன் வயது பூஜ்ஜியமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஜனவரி 1 வந்தவுடன், அதன் வயதில் 1 வருடம் சேர்க்கப்படுகிறது. ஒருவர் 1978 டிசம்பர் 31ம் தேதி பிறந்திருந்தால், அவரது சர்வதேச வயது 45 ஆகக் கருதப்படும், அதே நேரத்தில் தென் கொரியாவின் காலண்டர் ஆண்டின் படி, அவருக்கு 46 வயது மற்றும் கொரிய முறையின்படி 46 வயது என இருக்கும். இது புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில், வயது எந்த முறையில் கணக்கிடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடப்படாவிட்டால், சர்வதேச அமைப்பின் அடிப்படையில் வயது இப்போது கணக்கிடப்பட்டுள்ளதாக கருதப்படும் என்று அரசாங்க சட்ட அமைச்சகம் விளக்குகிறது.
மேலும் படிக்க | கிரேக்க கடலில் 750 பேருடன் சென்ற குட்டி கப்பல் கழிழ்ந்து விபத்து! முழு விவரம்!
சர்ச்சைகளை ஏற்படுத்திய வழக்கு
அமைச்சர் லீ வயதுக் கணக்கீட்டு முறையில் ஏற்படும் குழப்பத்தால் ஏற்படும் தேவையற்ற சமூகச் செலவுகளைக் குறைக்கவே, வயது முறையை ஒருங்கிணைக்கும் முறை கடைபிடிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மூத்த தொழிலாளர்களுக்கு வயதின் அடிப்படையில் சம்பளக் குறைப்புகளை நிர்ணயிக்கும் உச்ச ஊதிய முறை போன்ற வயதைக் கணக்கிடுவதற்கான பல்வேறு வழிகளால் சட்டப்பூர்வ சர்ச்சைகளை ஏற்படுத்திய வழக்குகளை அவர் குறிப்பிட்டார்.
புதிய அறிவிப்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
இருப்பினும், வயது அமைப்பில் மாற்றம் பொருந்தாத சில சந்தர்ப்பங்கள் உள்ளன. முதல் வகுப்பு மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் நுழைவது ஒரு எடுத்துக்காட்டு. பிறந்த தேதியைப் பொருட்படுத்தாமல், சர்வதேச முறைப்படி குழந்தைகள் ஆறு வயதை எட்டும்போது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளியைத் தொடங்க வேண்டும். குடிப்பழக்கம் மற்றும் புகைபிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது, அரசு ஊழியர் தேர்வுகளுக்கான தகுதி வயது மற்றும் கொரிய ஆண்களுக்கு இராணுவத்தில் சேரும் வயது போன்ற குறிப்பிட்ட பகுதிகளிலும் வயது முறை மாற்றம் பாதிக்காது. இந்த சந்தர்ப்பங்களில் புதிய ஆண்டை அடிப்படையாகக் கொண்ட வயதைக் கணக்கிடும் முறை தொடர்ந்து பொருந்தும்.
மேலும் படிக்க | கலகத்தில் இருந்து தப்பித்த ரஷ்யா... கை கொடுத்த பெலாரஸ் அதிபர்... நடந்தது என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ