கிணறு வெட்டும்போது கிடைத்த பொக்கிஷம்: இலங்கையில் இன்ப அதிர்ச்சி

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல என்று கூறுவார்கள். ஆனால், இலங்கையில் ஒருவர் கிணறு தோண்டும்போது அவர் வாழ்க்கையே மாறி விட்டது!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2021, 06:14 PM IST
கிணறு வெட்டும்போது கிடைத்த பொக்கிஷம்: இலங்கையில் இன்ப அதிர்ச்சி title=

கண்டி: கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல என்று கூறுவார்கள். ஆனால், இலங்கையில் ஒருவர் கிணறு தோண்டும்போது அவர் வாழ்க்கையே மாறி விட்டது!!

உலகின் மிகப்பெரிய சபையர் கிளஸ்டர் (Sapphire Cluster) இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, ஒரு நபர் தனது வீட்டின் பின்னால் கிணறு தோண்டும்போது விலைமதிப்பற்ற இந்த சபையரைக் கண்டுபிடித்தார். இந்த சபையர் கல்லின் விலை சர்வதேச சந்தையில் சுமார் 100 கோடி டாலர் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

'510 கிலோ எடை - 25 லட்சம் காரட்'

இலங்கையின் (Sri Lanka)  மிகப்பெரிய வைர மற்றும் ரத்தின நகைக்கடைக்கார் ஒருவர், இந்த சபையர் கல்லுக்கு செரண்டிபிட்டி சபையர் (Serendipity Sapphire) என்று பெயரிடப்பட்டதாகக் கூறினார். இதன் எடை 510 கிலோ மற்றும் தரம் 25 லட்சம் காரட் என்று கூறப்படுகிறது.

இந்த கல்லின் உரிமையாளர், தன் வீட்டில் பணி புரிந்த ஒருவர், நிலத்தை தோண்டிய போது, அங்கு புதைக்கப்பட்ட சில விலைமதிப்பற்ற கற்களைப் பற்றி தெரிவித்ததாக கூறினார். இதன் பின்னர் அவரது குழு இந்த புதையலை வெளியே எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றது.

ALSO READ: இந்த நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை: அச்சுறுத்தும் சவுதி அரேபியா

மறைக்கப்பட்ட அடையாளம்

சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கல்லின் உரிமையாளரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தான் நீண்ட காலமாக விலைமதிப்பற்ற கற்களின் (Diamonds) வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக சபையரின் உரிமையாளர் கூறினார்.

நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது

இலங்கை அதன் புகழ்பெற்ற சபையர் கல் மற்றும் உலகின் பிற விலைமதிப்பற்ற கற்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது. இங்குள்ள கடல் பகுதியில் காணப்படும் பவளமும் சிறந்த தரம் வாய்ந்ததாக உள்ளது.

சுற்றுலாவைத் (Tourism) தவிர, விலைமதிப்பற்ற கற்களின் வணிகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிக்கிறது. அதே நேரத்தில், கல் உரிமையாளர் நாட்டின் விதிகள் மற்றும் சட்டங்களின் கீழ் நிர்வாகத்திற்கு அவர் கண்டுபிடித்துள்ள பெரிய சபையரைப் பற்றி தகவல் அளித்துள்ளார்.

ALSO READ:Astonishing Astronomer: நாசாவுக்காக 7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது இளம் வானியலாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News