உலகில் COVID-19 தொற்று தீவிரமடைகிறது : WHO எச்சரிக்கை

COVID-19 நெருக்கடி உலகில் தீவிரமடைந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

Last Updated : Jul 11, 2020, 06:33 PM IST
  • உலகின் பெரும்பாலான இடங்களில் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என எச்சரிக்கை
  • அமெரிக்காவில் கொரோனா தொற்றால் சுமார் 32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • இந்தியாவில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகில் COVID-19  தொற்று தீவிரமடைகிறது : WHO எச்சரிக்கை title=

COVID-19 நெருக்கடி  தீவிரமடைந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ்  உலகின் பெரும்பாலான இடங்களில் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதோடு, தொற்று பாதிப்பு மேலும் மோசமடைந்து வருகிறது என கவலை வெளியிட்டுள்ளது.

ஜெனீவா (Geneva) : உலக சுகாதார அமைப்பு (WHO), கொரோனா வைரஸ்  தொற்று உலகின் பெரும்பாலான இடங்களில்  அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இதனால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என கருத்து கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை  நடந்த ஒரு மாநாட்டில் உரையாற்றிய WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus ) "இந்த வைரஸ் உலகின்  வளர்ந்த நாடுகளில்  உள்ள சுகாதார அமைப்புகளுக்கு கூட ஒரு சவாலாக உள்ளது. அதே நேரத்தில், சில நாடுகள், இதனை வெற்றிகரமாக கையாண்டுள்ளன. சில நாடுகள் ஓரளவிற்கு நிலைமையை கையாண்டுள்ளன” என்றார்.

ALSO READ | கொரோனாவால் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் என்ற ஆச்சரியத் தகவல்!!

 

உலகளவில் COVID-19 தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை கடந்த ஆறு வாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது  என்பதை பார்க்கும் போது,  தொற்றுநோய்  மேலும் வேகமாக பரவுகிறது என்பதை நான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று WHO தலைவர் மேலும் கூறினார்.

சனிக்கிழமை நிலவரப்படி, உலகளாவிய கொரோனா வைரஸ்  தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 12,507,849 ஆகவும், இறப்புகள் 560,460 ஆகவும் உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ALSO READ | Immunity அதிகரிக்க கஷாயம் குடிக்கிறீர்களா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்!!

 

தற்போது உலகின் மிக அதிகமான நோய்த்தொற்று உள்ள அமெரிக்காவில் சுமார் 32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 1 லட்சத்தி 34 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக,  பிரேசில் நாட்டில், சுமார் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்து விட்டனர்.

இந்தியாவை பொறுத்தவரை,  கொரோனா தொற்றினால் இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனினும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 22 ஆயிரம்  என தரவுகள் கூறுகின்றன.

Trending News