இனி சிம் கார்டுகள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தற்போதையா காலகட்டத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியிருந்த நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க தேவையில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு துறை ஆணை பிறப்பித்தது.
இந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, இனி சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை வழங்க வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம். அதற்கு பதிலாக அடையாள சான்றாக ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்டு, போன்ற சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்தி பின்பற்ற வேண்டும் என மத்திய தொலை தொடர்புத் துறை கூறியுள்ளது.