தீபாவளிக்கு சற்று முன்பாக மோடி அரசு மத்திய ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் LTA இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய ஊழியர்கள் 2022 க்குள் விடுப்பு பயண கொடுப்பனவை (LTA) பயன்படுத்தலாம். வடகிழக்கு, லடாக், அந்தமான்-நிக்கோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல இதை பயன்படுத்த முடியும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் விடுப்பு பயண கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதில், ஊழியர்கள் அவரது குடும்பத்தினரும் ஒன்றாக பயணம் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். பயணத்தின் போது ஏற்படும் பல செலவுகளை எல்.டி.ஏ இன் கீழ் பெறலாம். இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு எல் டி ஏவை யாரும் பயன்படுத்தவில்லை. அதனால், அரசாங்கம் அதன் கால அளவை 2 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
ஊழியர் மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், எல்.டி.சி-யில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில், ஊழியர்களுக்கு பயண மேற்கொள்வதற்கான உதவித்தொகை வழங்கப்படும். மத்திய ஊழியர்கள் லீவ் டிராவல் அலவன்ஸ் (எல்.டி.ஏ) வசதியைப் பயன்படுத்தி வடகிழக்கு, லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய நாடுகளுக்குச் செல்லலாம். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஊழியர்கள் தனியார் விமான நிறுவனங்கள் மூலமாகவும் பயணிக்க முடியும். விமான பயணத்திற்காக எகானமி க்ளாஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ALSO READ | வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இனி எங்கிருந்தும் ட்ரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்..!!
எல் டி ஏ அரசு ஊழியர்களில், விமான பயண வசதி கொடுக்கப்படாத ஊழியர்களும் (Non-Eligible Government Employees) விமானத்தில் பயணிக்க முடியும் என்று பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்தார். இந்த வசதிகள் அனைத்தும் 2022 செப்டம்பர் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
மத்திய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படும் டியர்னஸ் கொடுப்பனவு (டிஏ), கொரோனா நெருக்கடியால் பழைய விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்த கொடுப்பனவு 2020 ஜனவரியிலிருந்து 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதை அடுத்து மத்திய ஊழியர்களுக்கான டியர்னஸ் கொடுப்பனவு 21 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமைகள் காரணமாக அவை கொடுக்கப்படவில்லை. தற்போது, 30 ஜூன் 2021 வரை, கொடுப்பனவு 17 சதவீத வீதத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டியர்னஸ் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.
மேலும் படிக்க | மக்கள் மன நிலையை மாற்றிய கொரோனா... ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி நகரும் மக்கள்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe