இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது KYC அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதனை விரைவில் முடிக்குமாறும், அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியது. கடந்த சில மாதங்களாகவே பிஎன்பி வங்கி KYC-ஐ அப்டேட் செய்யுமாறு அதன் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி ட்வீட் செய்து, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் KYC-ஐ அப்டீட் அவசியம் முடிக்க வேண்டும் என்று கூறியது. KYCஐப் புதுப்பிக்க, உங்கள் பேரண்ட் கிளையைத் தொடர்புகொள்ள வேண்டும், KYC அப்டேட் செய்யப்படவில்லை என்றால், உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மாற்ற முடியாது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அல்லது ஒரு வருடத்திற்கும், வங்கி தனது வாடிக்கையாளர்களை KYC படிவத்தை பூர்த்தி செய்ய சொல்கிறது. KYC படிவத்தில், வாடிக்கையாளர்கள் பெயர், வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் முழு முகவரியை நிரப்ப வேண்டும்.
மேலும் படிக்கவும்: RBI Alert: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் விற்பவர்கள் ஜாக்கிரதை
வங்கிக் கிளைக்குச் சென்றும் உங்கள் KYCஐ அப்டேட் செய்யலாம், அங்கு KYC படிவத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் உங்கள் KYC அப்டேட் செய்யப்படும். அதேசமயம் வீட்டிலிருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்ய விரும்பினால் விரும்பினால், உங்கள் ஆவணங்களை வங்கிக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். KYC க்கு வாடிக்கையாளர்கள் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, என்ஆர்ஜிஇஏ அட்டை, பான் கார்டு ஆகியவற்றுடன் முகவரிச் சான்றுகளை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க: இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ