Bank Account Rules: இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் அனைவரிடமும் வங்கிக்கணக்கு இருக்கின்றது. நம் நாடு டிஜிட்டல் மயமாகி வரும் இவ்வேளையில், வங்கி தொடர்பான பெரும்பாலான வேலைகளை மக்கள் ஃபோன் மூலமாகவே செய்து விடுகிறார்கள். பல தரப்பட்ட பணிகளுக்காக சதாசர்வ காலமும் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் தங்கள் யுபிஐ செயலி (UPI App) அல்லது நெட் பேங்கிங் (Net Banking) மூலம் அனைத்து வங்கிப்பணிகளையும் ஒரு நொடியில் செய்ய விட முடிகின்றது. இருப்பினும், ஏதாவது பெரிய விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டால், வங்கி வாடிக்கையாளர்கள் (Bank Customers) அதை சரி செய்ய வங்கிகளுக்கு செல்கிறார்கள்.
பல நேரங்களில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி இருக்கும் சில கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கூட பராமரிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக அவர்களது இருப்பு மைனசில் செல்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வங்கி, வாடிக்கையாளரை இந்தக் கணக்கை மூடச் சொல்லும்போது, மைனஸாகப் போன தொகையைத் திருப்பிச் செலுத்தும்படி பலமுறை கேட்கப்படுகின்றது. வங்கி கேட்கும் பணத்தை வாடிக்கையாளர் செலுத்த வேண்டுமா? இது பற்றி ரிசர்வ் வங்கி கூறுவது என்ன? இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் விதி ஏதாவது உள்ளதா? இவற்றை பற்றி இங்கெ காணலாம்.
வங்கி பணத்தை கேட்க முடியாது
ஒரு வங்கி வாடிக்கையாளர் இருப்பை பராமரிக்கவில்லை என்றால், அவரது இருப்பு பூஜ்ஜியம் ஆகும். ஆனால், அது மைசனசில் செல்லாது. பல சமயங்களில் இருப்பு மைனசில் காண்பிக்கப்பட்டாலும், அந்த தொகையை வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பெற முடியாது. உங்களிடம் நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால், அதை முதலில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கியால் சொல்ல முடியாது.
ரிசர்வ் வங்கி சொலவ்து என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) இது குறித்த ஒரு வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. இதன் படி வாடிக்கையாளர்கள் ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர் தங்கள் வங்கிக்கணக்கை மூட நினைத்தால், அதை முற்றிலும் இலவசமாக செய்யலாம். இதற்கு வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. உங்கள் இருப்பு மைனஸில் செல்ல முடியாது என்று ஆர்பிஐ (RBI) கூறுகிறது.
இதற்கு புகார் அளிக்க முடியுமா?
ஏதேனும் ஒரு வங்கி உங்கள் கணக்கை மைனஸில் வைத்து, கணக்கை மூடுவதற்கு மைனஸ் பேலன்ஸ் தொகையை திருப்பிச் செலுத்தச் சொன்னால், அது குறித்து ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாம். இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும். இது தவிர, ரிசர்வ் வங்கியின் ஹெல்ப்லைன் எண்ணிலும் புகார் செய்யலாம். வாடிக்கையாளர்களின் புகாரின் அடிப்படையில் வங்கி மீது நடவடிக்கையும் எடுக்கலாம்.
வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இப்படிப்பட்ட பல வசதிகளை அளிக்கும் விதிகள் உள்ளன. இவற்றின் சரியான புரிதல் இல்லாமல் போனால், நாம் தேவையில்லாத நஷ்டத்தை சந்திகக் நேரிடலாம். ஆகையால் RBI விதித்துள்ள விதிகளை பற்றி தெரிந்துவைத்திருப்பது மிக அவசியமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ