Budget 2024: வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய நிவாரணம் காத்திருக்கிறதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Budget 2023: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் மாற்றம் இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2024, 05:05 PM IST
  • Union Budget 2024: என்ன மாற்றங்கள் இருக்கலாம்?
  • 8 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
  • புதிய வரி விதிப்பில் விரைவான மாற்றங்கள் வருமா?
Budget 2024: வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய நிவாரணம் காத்திருக்கிறதா? நிபுணர்கள் கூறுவது என்ன? title=

Budget 2023: வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. வரவிருக்கும் பட்ஜெட்டில் அவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கலாம். இது தேர்தல் ஆண்டு, எனவே வரி செலுத்துவோரை கவர்ந்திழுக்க அரசு முயற்சிக்கும். மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Election) முன் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் (Interim Budget) வரி செலுத்துவோர் பெரும் நிவாரணம் பெற வாய்ப்புகள் உள்ளன. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) சமர்ப்பிக்கவுள்ள பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் மாற்றம் இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள வரி விலக்கின் வரம்பை அரசு அதிகரிக்கலாம். இந்த மாற்றத்திற்காக புதிய நிதி மசோதாவை அரசு கொண்டு வரலாம். 

Union Budget 2024: என்ன மாற்றங்கள் இருக்கலாம்? 

வரி செலுத்துவோரை (Taxpayers) மகிழ்விக்கும் வகையில், 2024 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் சிறிய மாற்றங்களை அரசாங்கம் செய்யலாம். இதில், தற்போதுள்ள வரிவிலக்கை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. புதிய வரி விதிப்பில் (New Tax Regime) தற்போதைய வரி விலக்கு ரூ.7 லட்சமாக உள்ளது. இதை ரூ.7.5 லட்சமாக அதிகரிக்கலாம். அதாவது ரூ.50 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். முன்னதாக, புதிய வரி விதிப்பில் விலக்கு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அரசு உயர்த்தியது. இதில், 87(A) பிரிவின் தள்ளுபடி ரூ.12500ல் இருந்து ரூ.25000 ஆக உயர்த்தப்பட்டது.

8 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்

வரும் நிதியாண்டில் ரூ.8 லட்சம் வரையிலான சம்பளத்திற்கு வரி விலக்கு (Tax Free) அளிக்கப்படும். பட்ஜெட்டில் இதுபோன்ற ஒதுக்கீடு செய்யப்பட்டால், விலக்கு வரம்பு ரூ.8 லட்சம் வரை அதிகரிக்கலாம் என வரி நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதைய முறையில் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு உண்டு. இதில் அடிப்படை விலக்கு, தள்ளுபடி மற்றும் நிலையான விலக்கு ஆகியவையும் அடங்கும்.

மேலும் படிக்க | மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் இலவச மருத்துவ காப்பீடு... விண்ணப்பிக்கும் முறை..!!

நிலையான விலக்கு (Standard Deduction) 

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்பில் மாற்றங்களைச் செய்திருந்தார். இதில், அடிப்படை விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதே சமயம், 5 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடியின் வரம்பு, 7 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது தவிர, நிலையான விலக்கு நன்மையும் இதில் சேர்க்கப்பட்டது. இதன் பிறகு, 7.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் வரி விலக்கு (Tax Exemption) அளிக்கப்பட்டது. புதிய வரி விதிப்பில் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.15,000 கூடுதல் தள்ளுபடி அளிக்கப்பட்டது.

புதிய வரி விதிப்பில் விரைவான மாற்றங்கள் வருமா?

வரும் காலங்களில் புதிய வரி விதிப்பில் விரைவான மாற்றங்கள் ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். புதிய வரி விதிப்பை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதன் மூலம் அரசாங்கம் பயனடையும் என்பதை வருமான வரிக் கணக்குகளின் (ITR Filing) சாதனை அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதற்கு சில வரி விலக்குகளை அதில் சேர்க்க வேண்டும். 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கு (Assessemnt Year 2023 24) டிசம்பர் 31 வரை 8.18 கோடி வருமான வரி ரிட்டர்ன்கள் (ITR) பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

அட்வான்ஸ் டேக்ஸ் வசூலில் பலத்த எழுச்சி

வரி விலக்கை அதிகரிப்பது குறித்து அரசு கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் பல நன்மைகள் ஏற்படும். வரி வசூலை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. 2023-24 நிதியாண்டில், டிசம்பர் 15 வரையிலான மொத்த அட்வான்ஸ் டேக்ஸ் (Advance Tax) வசூல், கடந்த ஆண்டு இதே காலத்தை விட 19.76 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 15ம் தேதி வரை, ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.521302 கோடியாக இருந்த இந்த வரி வசூல் ரூ.624329 கோடியாக உள்ளது.

நேரடி வரி வசூல் அதிகரித்து வருகிறது

டிசம்பர் 17, 2023 வரை, அதே காலகட்டத்தை விட நேரடி வரி வசூல் (Direct Tax Collection) 20.66 சதவீதம் அதிகரித்துள்ளது. நேரடி வரி வசூல் ரூ.13,70,388 கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.11,35,754 கோடியாக இருந்தது.

மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News