பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் டிக்டாக் செயலியின் உள்ளடக்கங்களைத் தடைசெய்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாகிஸ்தானில் அதன் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக டிக்டோக்கின் உரிமையாளரான சீன நிறுவனமான ByteDance வருத்தம் தெரிவித்ததாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் கூறுகிறது.
வீடியோ பகிர்வு செயலியான டிக்டோக், பாகிஸ்தானில் தனது சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், கவனமாக இருப்பதாகவும் கூறுகிறது. "அநாகரீகமான உள்ளடக்கம்" (indecent content) இருப்பதாகக் கூறிய பாகிஸ்தான் அதிகாரிகள் TikTokக்கிற்கு தடை விதித்தனர்.
"படைப்பாற்றலை ஊக்குவிப்பதும், அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊக்குவிப்பதும் தான் டிக்டோக்கின் நோக்கமாகும். அதே நோக்கதில்தான் நாங்கள் பாகிஸ்தானில் செயல்பட்டோம். ஆர்வத்துடன் படைப்பாற்றல் கொடுத்த உற்சாகத்தை பாகிஸ்தான் மக்கள் வரவேற்றனர். வெளியே தெரியாத, நம்பமுடியாத பல திறமைகள் வெளிவந்தன. அவை, திறமையான படைப்பாளர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைத் திறந்துவிட்டன’ என்று பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனத்தின் TikTokகின் முயற்சிகளை பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) ஒப்புக் கொண்டு, பாராட்டிய போதிலும், டிக்டோக்கின் சேவைகள் நாட்டில் தடை செய்யபட்டன. பைட்டான்ஸ் நிறுவனம், இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து பி.டி.ஏ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவில்லை.
"பி.டி.ஏ உடனான எங்கள் உரையாடல் ஆக்கப்பூர்வமாகவும், நிலையான, செயல்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்தும், பாகிஸ்தான் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் இன்னமும் நம்புகிறோம், நாங்கள் சந்தையில் மேலும் முதலீடு செய்ய விரும்புகிறோம். அது குறித்து மேலும் ஆராயலாம். டிக்டோக்கில் மக்களின் திறமையும் மேம்படும்" என்று பைட் டான்ஸ் கூறுகிறது.
டிக்டேக்கின் கட்டமைப்பை மேம்படுத்த வளங்களை மறு ஒதுக்கீடு செய்வதாக ByteDance உறுதியளித்தது. "எதிர்காலத்தில் எங்கள் சேவைகளுக்கான அணுகலை மீண்டும் திறக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தால், இந்த சந்தையில் எங்கள் வளங்களை மறு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யலாம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
TikTokஇன் சேவைகளை தற்போது பாகிஸ்தானில் இருக்கும் பயனர்கள் அணுகமுடியவில்லை. சேவைகள் பி.டி.ஏவால் தடை செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு அதிகமான நிலையில் ByteDance இவ்வாறு கூறுகிறது.
"உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கும், எங்கள் உள்ளடக்க அளவீட்டு திறனை மேலும் மேம்படுத்துவதற்கும் நாங்கள் மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிரூபிக்க பி.டி.ஏ உடன் நாங்கள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்" என்று, பாகிஸ்தானில் டிக்டோக் தடை செய்யப்பட்ட பின்னர் ByteDance கூறுகிறது.
உள்ளூர் மொழி உள்ளடக்கங்கள், குழுவின் திறனை கணிசமாக அதிகரிப்பது உட்பட, பல்வேறு அம்சங்கள் தொடர்பான பாகிஸ்தான் அரசாங்கத்தின் கேள்விகளுக்கு தீர்வு காண, கடந்த ஒரு வருடத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் துடிப்பான ஆன்லைன் சமூகம் இன்னும் தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த முடியாமல் போனது என்றும், அவற்றை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான டிக்டாக் பயனர்களுக்கு தெரியப்படுத்த தடை விதித்திருப்பதும் துரதிர்ஷ்டவசமானது என்று ByteDance வருத்தம் தெரிவித்துள்ளது.
ByteDance பிரபலமான வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் பயனாளர்கள் அனைவரும், இசை, உதடு-ஒத்திசைவு, நடனம், நகைச்சுவை மற்றும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களை 3 முதல் 15 வினாடிகள் மற்றும் short looping videos என்ற பிரிவில் வரும் வீடியோக்களை 3 முதல் 60 வினாடிகள் வரை கால வரையறைக்குள் உருவாக்க அனுமதிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னதாக டிக்டாக் உட்பட பல்வேறு சீன செயலிகளை பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும் தடை செய்தது.
Read Also | 70 சிட்டுக்குருவிகள் கிதாரில் நிகழ்த்திய இசை வேள்வியின் Viral Video
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR