EPFO அட்டகாசமான செய்தி: விரைவில் ஊதிய வரம்பில் ஏற்றம்.. 75 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்

EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள உறுப்பினர்களுக்கு வரும் காலங்களில் நல்ல செய்திகள் கிடைக்கப்போகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 16, 2023, 01:12 PM IST
  • Employees Pension Scheme: யாருக்கு நன்மை கிடைக்கும்?
  • EPFO Salaty Limit Increase: அரசின் அனுமதி அவசியம்.
  • EPS தொடர்பான தற்போதைய விதி என்ன?
EPFO அட்டகாசமான செய்தி: விரைவில் ஊதிய வரம்பில் ஏற்றம்.. 75 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் title=

EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள உறுப்பினர்களுக்கு வரும் காலங்களில் நல்ல செய்திகள் கிடைக்கப்போகின்றன. இதன் வரம்பு நீட்டிக்கப்படக்கூடும் என கூறப்படுவதாக சில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, 15,000 ரூபாய் அல்லது 15,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வரம்பு தற்போது 21,000 ரூபாயாக உயரும் என கூறப்படுகின்றது. 

சம்பள வரம்பை (EPFO Salary Limit Increased) மாதம் ரூ.21,000 ஆக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த குழு இதை  முன்மொழிந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசித்த பிறகு இந்த உயர்வை அரசு பிற்காலத்தில் அமல்படுத்தலாம் என்று குழு கூறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த உயர்வை EPFO ​​இன் மத்திய அறங்காவலர் குழு ஏற்றுக்கொண்டால், லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

Employees Pension Scheme: யாருக்கு நன்மை கிடைக்கும்?

அறிக்கை குறிப்பிடுவது போல், இதில் கூடுதல் நபர்கள் சேரும்போது, கூடுதல் தொகை என்பது அதிகாரத்தின் சுமையை அதிகரிக்கும். தற்போது, ​​இதற்கு பொது ஆணையத்திடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை EPFO-ன் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு (Central Government) ஒவ்வொரு ஆண்டும் 6,750 கோடி ரூபாய் செலவழிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன், 7.5 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். இதற்கு முன்னர் இத்தகைய செயல்முறை கடந்த 2014 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பிஎஃப் -க்கான அதிகபட்ச வரம்பு அப்போது ரூ.6,500 இல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. 

ஒரு அறிக்கையின்படி, முன்மொழிவு செய்யப்பட்டுள்ள விஷயம் செயல்படுத்தப்பட்ட பிறகு, 7.5 மில்லியன் கூடுதல் ஊழியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.6,750 கோடி செலுத்துகிறது.

EPFO Salaty Limit Increase: அரசின் அனுமதி அவசியம்

20 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் EPFO ​​இல் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், 15,000 ரூபாய் வரை ஊதியம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் EPF சந்தா கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கை கூறியுள்ளது. 21,000 ரூபாய்க்கு மேல் வரம்பை மீறும் ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்றும் மற்ற மத்திய அரசின் ஓய்வூதிய உதவித் திட்டத்தின் பலனும் வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 இன் கீழ், இபிஎஃப்ஓ ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிதி வடிவத்தில் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது. இபிஎஃப்ஓ ​​ஜனவரி 2022 இல் நிகர அடிப்படையில் 1.52 மில்லியன் ஊழியர்களைச் சேர்த்தது, இது டிசம்பர் 2021 இல் இருந்த 1.26 மில்லியனுடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | உத்தரவாத வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்... 1000 ரூபாயில் தொடங்கலாம்!

EPS தொடர்பான தற்போதைய விதி என்ன?

ஒரு நபர் ஒரு வேலையில் சேர்ந்து இபிஎஃப் (EPF) -இல் ஒரு உறுப்பினர் ஆகும்போது, அவர் EPS- லும் உறுப்பினர் ஆகிறார். ஒரு ஊழியர் இபிஎஃப் -இல் 12% பங்களிப்பை அளிக்கிறார். அவரது நிறுவனமும் அதே அளவு பங்களிப்பை அளிக்கின்றது. ஆனால் அதில் 8.33 சதவீதம் EPS -க்கு செல்கிறது. தற்போது இபிஎஸ் -க்கான அதிகபட்ச ஓய்வூதிய ஊதிய வரம்பு வெறும் ரூ. 15 ஆயிரமாக உள்ளது.அதிகபட்ச வருடாந்திர பங்கு (15000 இல் 8.33%) ரூ. 1250 ஆக இருக்கும்.

ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ஊழியர் ஓய்வு பெற்ற பிறகும் 15,000 ரூபாயாகக் கருதப்படுகிறது. அதன்படி ஒரு ஊழியர் EPS இன் கீழ் அதிகபட்சமாக 7,500 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.

இதற்கு முன் 2014ல் திருத்தப்பட்டது

15 ஆயிரத்திற்கும் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு EPF திட்டம் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உங்கள் அடிப்படை சம்பளத்தில் அரசு 1.6% பங்களிக்கிறது. இபிஎஃப்ஓ சம்பள வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தினால் 75 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்கு முன்னர் 2014ல் சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க | ரூ. 50,100,200,500... நோட்டுகள் முக்கிய அப்டேட்: ரிசர்வ் வங்கி அளித்த சூப்பர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News