Indian Railways: சென்னையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விபரம்!

நாட்டின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருக்கு ரயில்வே பண்டிகை காலங்களிலும், கூடுதல் தேவை ஏற்படும் காலங்களிலும், சிறப்பு ரயில்களை இயக்குவதை வழகக்மாக கொண்டுள்ளது.

Last Updated : Nov 29, 2023, 02:15 PM IST
Indian Railways: சென்னையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விபரம்! title=

நாட்டின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருக்கு ரயில்வே பண்டிகை காலங்களிலும், கூடுதல் தேவை ஏற்படும் காலங்களிலும், சிறப்பு ரயில்களை இயக்குவதை வழகக்மாக கொண்டுள்ளது. ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சேவை தொடங்கப்படுகிறது. இநிலையில், தெற்கு ரயில்வே ஒன்பது சிறப்பு ரயில்களின் இயக்கத்தை ஜனவரி இறுதி வரை  நீட்டித்துள்ளது. இந்த மாதம் ரயில்கள் சேவை நிறுப்படும் என முன்னதாக கூறப்பட்ட நிலையில்,  ஒன்பது ரயில்களின் சேவை ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் 06061 தாம்பரம் - நாகர்கோவில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் ஜனவரி 26 வரை இயக்கப்படும்.

ரயில் எண் 06064 தாம்பரம்-மங்களூரு இடையே வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் ஜனவரி 26 வரை இயக்கப்படும்.

ரயில் எண் 06073 திங்கட்கிழமைகளில் புறப்படும் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் இடையிலான வாராந்திர சிறப்பு ஜனவரி 29 வரை இயக்கப்படும்.

ரயில் எண் 06074 புவனேஸ்வர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமைகளில் புறப்படும். இந்த ரயில் ஜனவரி 30 வரை இயக்கப்படும்.

ரயில் எண் 06063 மங்களூரு சந்திப்பு - தாம்பரம் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனவரி 28 வரை இயக்கப்படும்.

ரயில் எண் 06065 மங்களூரு சந்திப்பு - தாம்பரம் சிறப்பு ரயில்  சனிக்கிழமைகளில் ஜனவரி 27 வரை இயக்கப்படும்.

ரயில் எண் 06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வியாழக்கிழமை சிறப்பு ரயில் ஜனவரி 25 வரை இயக்கப்படும்.

ரயில் எண் 06069 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் ஜனவரி 26 வரை இயக்கப்படும்.

மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்!

சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் சிறப்பு ரயில்

இது தவிர, கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், தினமும் சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. புதன்கிழமை மட்டும் இயக்கப்படாமல் இருந்து வந்த,  நிலையில் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதன்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

சென்னை - கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில்

இதே போன்று, சென்னை - கோவை இடையிலும் வந்தே பாரத் சிறப்பு ரயில் நேற்று முதல் தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசலைத் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை மற்றும் கோவை - சென்னை இடையே செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பர் 28 முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளிலும்   வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும். மறுமாா்க்கமாக கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை செவ்வாய் கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

மேலும் படிக்க | Indian Railways: விரைவில் வருகிறது வந்தே பாரத் சாதாரண்... குறைந்த கட்டண ரயில் சேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News