HDFC Life: வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி, கணக்கில் அசத்தல் போனஸ்

HDFC Life: நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எச்டிஎஃப்சி லைஃப்-இன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது வாடிக்கையாளர்களுக்கான பயன்கள் அதிகமாகியுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 22, 2022, 06:27 PM IST
  • ஹெச்டிஎஃப்சி லைஃப் அதன் 5.87 லட்சம் பாலிசிதாரர்களுக்கு மிகப்பெரிய போனஸை வழங்கப் போகிறது.
  • பாலிசிதாரர்களுக்கு 2465 கோடி போனஸ் கிடைக்கும்.
  • 2000 ஆம் ஆண்டில், ஹெச்டிஎஃப்சி லைஃப் முதல் முறையாக காப்பீட்டுத் துறையில் தனது முயற்சியை மேற்கொண்டது.
HDFC Life: வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி, கணக்கில் அசத்தல் போனஸ் title=

எச்டிஎஃப்சி லைஃப் பாலிசிதாரர்களுக்கு நல்ல செய்தி: நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எச்டிஎஃப்சி லைஃப்-இன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது வாடிக்கையாளர்களுக்கான பயன்கள் அதிகமாகியுள்ளன. 

ஹெச்டிஎஃப்சி லைஃப் அதன் 5.87 லட்சம் பாலிசிதாரர்களுக்கு மிகப்பெரிய போனஸை வழங்கப் போகிறது. இது மட்டுமின்றி, எச்டிஎஃப்சி லைஃப் தனது பங்கேற்புத் திட்டங்களில் வழங்கிய அதிகபட்ச போனஸ் இதுவாகும். இதை பற்றி இந்த பதிவில் விவரமாக காணலாம். 

பாலிசிதாரர்களுக்கு 2465 கோடி போனஸ் கிடைக்கும்

ஹெச்டிஎஃப்சி லைஃப் அளித்த தகவலின்படி, ஹெச்டிஎஃப்சி 5.87 லட்சம் பாலிசிதாரர்களுக்கு ரூ.2465 கோடியை போனஸாக வழங்கப் போகிறது. அதில் ரூ.1,803 கோடி ரூபாய் பாலிசிதாரர்களுக்கு இதே நிதியாண்டில் மெச்யூர் ஆகப்போகும் பாலிசியில் அல்லது கேஷ் போனசாகவும் வழங்கப்படும். 

எப்போது பணம் கிடைக்கும்

அதன்பிறகு, காப்பீட்டு பாலிசி முதிர்ச்சியடையும் போது, ​​அல்லது பாலிசிதாரரின் இறப்பு அல்லது பாலிசி சரண்டர் செய்யும் போது, நிலுவையில் உள்ள போனஸ் வழங்கப்படும். அதாவது, பாலிசிதாரர்களுக்கு பெரிய சலுகைகளை வழங்க வங்கி தயாராகி வருகிறது. 

மேலும் படிக்க | இன்னும் 10 நாட்களில் இந்த 5 முக்கிய விதிகள் மாறும்; தெரிந்துக்கொள்ளுங்கள் 

இந்த போனஸை அறிவித்த ஹெச்டிஎஃப்சி லைஃப் எம்டி-சிஇஓ விபா படால்கர், “இது நிறுவனம் வழங்கும் மிக உயர்ந்த போனஸ் ஆகும். வருடா வருடம் போனஸ் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் பாலிசிதாரர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற முடிவு செய்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தின் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தைய்ம் பொருளாதார ரீதியாக வலுப்படுத்த உறுதியாக உள்ளார்கள்” என்று கூறியுள்ளார். 

நிறுவனத்தின் பங்கு சரிந்தது

காப்பீட்டுத் துறையில் தனியார் துறை அனுமதிக்கப்பட்ட பிறகு, 2000 ஆம் ஆண்டில், ஹெச்டிஎஃப்சி லைஃப் முதல் முறையாக காப்பீட்டுத் துறையில் தனது முயற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் கீழ், ஹெச்டிஎஃப்சி தற்போது ஆயுள் பாதுகாப்பு, சேமிப்பு, முதலீடு, வருடாந்திர மற்றும் சுகாதார திட்டங்களை வழங்குகிறது. இது மட்டுமின்றி, ஹெச்டிஎஃப்சி லைஃப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் அதன் பங்குகள் சுமார் ரூ.554 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. எனினும், சமீபத்தில் இதன் பங்கு 29 சதவீதம் சரிந்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: 6% அகவிலைப்படி உயர்வு ஜூலையில் சாத்தியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News