மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 6% சம்பள உயர்வு!!

6% Salary Hike: மின்சார வாரிய ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1, 2019 முதல் மின்சார வாரியத்தின் ஊழியர்களுக்கு  6 சதவீத சம்பள உயர்வின் பலன் அளிக்கப்படும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2023, 03:49 PM IST
  • மின்சார வாரிய ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • மின்சார வாரிய ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • சம்பள உயர்வு கோரி கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 6% சம்பள உயர்வு!!  title=

மாநில அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு: தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. சில மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் 6 சதவீதம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர் மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த உற்சாத்தில் உள்ளனர். 

யாரது ஊதியத்தில் 6% ஏற்றம்?

மின்சார வாரிய ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பள உயர்வு கோரி கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த ஊழியர்களின் சம்பளத்தை 6 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. மின் வாரிய ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று தெரிவித்தார்.

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இறுதிச் சுற்று விவாதம் நான்கு மணி நேரம் நீடித்தது. இதில் Tangedco சிஎம்டி ராஜேஷ் லக்கானி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஊதிய திருத்தத்தால் Tangedco -க்கு ஆண்டுக்கு 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். டிசம்பர் 1, 2019 முதலான நிலுவைத் தொகையை செலுத்த மேலும் 622 கோடி ரூபாய் செலவாகும். இந்த பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசு மீது அமைச்சர் பாலாஜி குற்றம் சாட்டினார். ஊதிய மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள், அவர்கள் செயல்முறையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறினர்.

கோரிக்கைகளின் விவரம் என்ன? 

ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்காதது உள்ளிட்டவைகளை கண்டித்து சென்னையில் உள்ள மின் வாரிய தலைமையகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இதுவரை அரசு ஏற்கவில்லை. இதுகுறித்து அரசு மற்றும் ஊழியர்களிடையே பலமுறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அதிகாரிகளுடன் 19 தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய 18 பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... டிஏ மட்டுமல்ல.. இன்னும் 3 அலவன்ஸ்களில் ஏற்றம் இருக்கும்

இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை

19வது சுற்று பேச்சு வார்த்தையிலும் கூட முழுமையான ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2019 டிசம்பர் 1 முதல் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், இதனுடன் டிசம்பர் 1, 2019 முதல் மின்சார வாரியத்தின் ஊழியர்களுக்கு  6 சதவீத சம்பள உயர்வின் பலன் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த உயர்வு 2 தவணைகளில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எத்தனை ஊழியர்கள் பயனடைவார்கள்

இந்த ஊதிய உயர்வின் பலன் 75,978 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கிடைக்கும். 62,548 ஊழியர்களுக்கு 3 சதவீத சம்பள உயர்வின் பலன் கிடைக்கும். சம்பள உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.527 கோடி கூடுதலாக செலவழிக்க வேண்டி வரும். தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | UPI: கூகுள் பே, போன் பே மூலம் தினமும் எவ்வளவு பணம் அனுப்பலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News