RBI On Loans EMI: பங்குச்சந்தை மற்றும் பல பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பின் படி, இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல், பழைய நிலையிலேயே தொடர்வதாக அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது பணவியல் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டது. ரெப்போ விகிதம் மற்றும் பிற கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று தனது உரையில் அறிவித்தார். இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 70,000 என்ற அளவைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீடு 21,000 அளவைக் கடந்தது. ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பங்குச்சந்தை 70 ஆயிரத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி கொடுத்த அறிவிப்பு என்ன?
ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) கவர்னர் சக்திகாந்த தாஸ் இருமாத கடன் கொள்கையை ஆய்வு செய்த பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். வளர்ச்சி விகிதம் குறித்த முந்தைய மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 2024க்குள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரெப்போ விகிதம் தற்போது 6.5 சதவீதமாகவே தொடரும் என்று ஆளுநர் தாஸ் தெளிவுபடுத்தினார். இரண்டாவது காலாண்டில் மொத்த தேசிய வருமானம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வளர்ந்ததால் ரிசர்வ் வங்கி ஐந்தாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், தனிநபர் கடன் (Personal Loan), கார் கடன் (Car Loan), வீட்டுக் கடன் (Home Loan) அல்லது வேறு எந்த வகை கடன்களிலும் இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
EMI குறைவாக இருக்கும்
இரண்டு நாட்களாக நடந்த கடன் கொள்கை குழு கூட்டத்தில் மொத்தமுள்ள 6 உறுப்பினர்களில் 5 பேர் கடன் கொள்கையை தளர்த்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போதைய பொருளாதாரச் சூழல் அதற்குச் சாதகமாக இல்லை. ஆனால் அடுத்த 2 முதல் 3 மாதங்களில் ராபி பருவத்தின் நிலை தெளிவாகிவிடும். மேலும், தொழில் வளர்ச்சியில் தற்போதைய பந்தய போக்கு இப்படியே நீடித்தால், வட்டி விகிதக் குறைப்புக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்றும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே, ரிசர்வ் வங்கி கவர்னரின் இன்றைய அறிவிப்பு பிப்ரவரி அல்லது ஏப்ரல் 2024 கொள்கை மதிப்பாய்வில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. இது நடந்தால், வட்டி விகிதம் அதாவது EMI குறையும்.
மேலும் படிக்க | பான் கார்டு தொலைந்துவிட்டதா... வெறும் 50 ரூபாயில் வீட்டிற்கே வந்து செரும்..!!
ரெப்போ விகிதத்தின் விளைவு என்ன?
ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயிக்கும் ரெப்போ விகிதம் வங்கிக் கடனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கான கடன் விகிதமாகும். அது குறையும் போது, கடன்கள் மலிவாகிறது. அது அதிகரிக்கும் போது, வங்கிகளும் தங்கள் கடன் விலைகளை அதிகரிகின்றன, அதாவது வட்டியை அதிகரிக்கின்றன. இது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற அனைத்து வகையான கடன்களையும் பாதிக்கிறது. இதனால் கடனுக்கான செலவிலும் EMI சுமையிலும் தாக்கங்கள் ஏற்படுகின்றன.
மேலும் படிக்க | RBI முக்கிய அறிவிப்பு: UPI பரிவர்த்தனை வரம்பு அதிகரித்தது, விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ