கடந்த ஆண்டை விட இந்த ஆண்டியில் இரு சக்கர வாகன விற்பனை சரிவு!!

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22.24% சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Sep 9, 2019, 01:20 PM IST
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டியில் இரு சக்கர வாகன விற்பனை சரிவு!! title=

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22.24% சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது!!

நாட்டின் மொத்த வாகன விற்பனை கடந்த மாதத்தில் 23.55% இருந்து  சுமார் 18.21 லட்சம் யூனிட்டுகளாக குறைந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் 23.82 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது என்று இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (SIAM) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், உள்நாட்டு பயணிகளின் வாகன விற்பனை 10-வது மாதத்தில் 31.57% குறைந்துள்ளது, கடந்த ஆண்டு ஆகஸ்டில் சுமார் 2.87 லட்சம் யூனிட்டுகளில் இருந்து சுமார் 1.96 லட்சம் யூனிட்டுகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

பயணிகள் வாகனங்கள் பிரிவில், கார் விற்பனை ஆகஸ்ட் 2018 இல் 1.96 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகளை விட 41% சரிந்து கிட்டத்தட்ட 1.16 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது. பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 71,478 ஆக இருந்தது. 73,085 யூனிட்டுகளில் இருந்து 2.20% ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை சுமார் 19.47 லட்சம் யூனிட்களாக இருந்தது. இந்த ஆண்டில் ஒப்பிடும்போது மொத்த இருசக்கர வாகன விற்பனை 22.24% சரிந்து சுமார் 15.14 லட்சம் யூனிட்களாக குறைந்துள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை 22.33% குறைந்து சுமார் 9.37 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது. ஆகஸ்ட் 2018 இல் 12.07 யூனிட்டுகளை விட, ஸ்கூட்டர் விற்பனை 22.19% குறைந்து 5.20 லட்சம் யூனிட்டுகளாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 6.69 லட்சம் யூனிட்களாக இருந்துள்ளது.

வணிக வாகனங்களின் விற்பனை ஆகஸ்டில் 38.71%. அதாவது, 51,897 யூனிடிலிருந்து 84,668 யூனிட்களாக குறைந்துள்ளது. அதேபோல், கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 34,073 யூனிட்களிலிருந்து 54.30% சரிந்து 15,573 ஆக இருந்தது.

 

Trending News