Small Saving Schemes: அரசு வட்டி விகிதங்களை மாற்றியுள்ளதா? முழு விவரம் உள்ளே!!

2020-21 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட ஒரு அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2020, 01:27 PM IST
  • அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
  • சேமிப்பு வைப்புக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4% ஆக இருக்கும்.
  • கால வைப்புகளில், 5.5-6.7 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.
Small Saving Schemes: அரசு வட்டி விகிதங்களை மாற்றியுள்ளதா? முழு விவரம் உள்ளே!! title=

அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் (Small Saving Scheme) வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதாவது, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), NSC, சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்ற திட்டங்கள் முன்பைப் போலவே தொடர்ந்து வட்டி பெறும். இதை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில், கடன் வாங்குவதற்கான அரசாங்கத்தின் இலக்கு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் திருத்தப்படுகின்றன.

சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், அதாவது ஒரு காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டணங்களை நிதி அமைச்சகம் தீர்மானித்து அறிவிக்கிறது. மூன்றாவது காலாண்டாக, சிறிய சேமிப்பு திட்டங்களின் விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இவை அப்படியே தொடர்கின்றன.

நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

2020-21 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட ஒரு அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டது. டிசம்பர் 31 வரை இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ: EPF Account-டிலிருந்து advance பெறலாம் சுலமபா: உங்களுக்கான simple steps இதோ!!

Small Savings-ல் இப்போதைய வட்டி என்ன

- தேசிய சேமிப்பு ரெக்கரிங் வைப்பு கணக்கு: 5.8%

- தேசிய சேமிப்பு மாத வருமான கணக்கு: 6.6%

- கிசான் விகாஸ் பத்ர (Kisan Vikas Patra): 6.9%

- பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund): 7.1%

-தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate): 6.8%

-சுகன்யா சம்ரித்தி திட்டம் (Sukanya Samriddhi Scheme): 7.6%

- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizens Savings Scheme): 7.4%

சேமிப்பு வைப்புக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4% ஆக இருக்கும்.

1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால வைப்புகளில் (Term Deposit), 5.5-6.7 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.

ALSO READ: PPF, SSY திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாறக்கூடும்: விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News