Income Tax: உறவுகளுக்குள் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வருமா

Income Tax Notice: கணவன் மனைவிக்கு இடையில், பெற்றோருக்கும் பிள்ளைகளிக்கும் இடையில், இப்படி சொந்தங்களுக்கு இடையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அதற்கும் வரி செலுத்த வெண்டுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2024, 01:18 PM IST
  • பண பரிவர்த்தனை விதிகள் .
  • வருமான வரித்துறை நோட்டீஸ் எப்போது அனுப்பப்படுகிறது?
  • எந்த சந்தர்ப்பங்களில் விலக்கு கிடைக்கும்?
Income Tax: உறவுகளுக்குள் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வருமா title=

Income Tax Notice: நாட்டில் உள்ள மக்களின் நிதி நடவடிக்கைகளை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. வருமான வரித்துறையிடம் வரி செலுத்தும் அனைவரது நிதித் தகவலும் இருக்கின்றது. வரி செலுத்தும் ஒவ்வொரு நபரும் ஐடிஆர் நிரப்புவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானம் வரித்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பை விட அதிகமாக வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், இதில் மக்களுக்கு பல வித குழப்பங்களும் கேள்விகளும் உள்ளன. நாம் அலுவலகங்களில் பணி புரிவதால் நமக்கு கிடைக்கும் ஊதியம், மற்றும் வணிகத்தில் கிடைக்கும் லாபம் என இவற்றைத்  தவிரவும் பல வழிகளில் நமக்கு வருமானம் கிடைக்கின்றது. இவற்றுக்கான வரி விதிகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கணவன் மனைவிக்கு இடையில், பெற்றோருக்கும் பிள்ளைகளிக்கும் இடையில், இப்படி சொந்தங்களுக்கு இடையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அதற்கும் வரி செலுத்த வெண்டுமா? எவ்வளவு பண பரிவர்த்தனைகளை செய்யலாம்? வரி செலுத்தாவிட்டால் வருமான வரி நோட்டீஸ் வருமா? இதற்கான விதிகள் என்ன? இந்த பதிவில் இப்படிப்பட்ட பண பரிவர்த்தனைகளை பற்றி விரிவாக காணலாம். 

பண பரிவர்த்தனை விதிகள் (Cash Transaction Rules): 

சொந்தங்களுக்கு இடையே அடிக்கடி பணப் பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நமது ஒவ்வொரு பரிவர்த்தனை மூலமாகவும் நமக்கு வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொந்தங்களுக்கு இடையிலான பண பரிவர்த்தனைக்கு கூட வருமான வரி நோட்டீஸ் (Income Tax Notice) கிடைக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகிறது. 

மேலும் படிக்க | Budget 2024:NPS முதலீடுகளுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படலாம்..!!

வருமான வரித்துறை நோட்டீஸ் எப்போது அனுப்பப்படுகிறது?

கணவர் ஒவ்வொரு மாதமும் வீட்டு செலவுக்கு பணம் கொடுத்தாலோ அல்லது பரிசாக கொடுத்தாலோ, மனைவிக்கு வருமான வரி (Income Tax) விதிக்கப்படாது. இந்த இரண்டு வகையான தொகைகளும் கணவரின் வருமானமாக கருதப்படும். இந்தத் தொகைக்கு வருமான வரித் துறையிடம் (Income Tax Department) இருந்து மனைவிக்கு எந்த நோட்டீசும் வராது. ஆனால், மனைவி மீண்டும் மீண்டும் இந்தப் பணத்தை எங்காவது முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்றால், அந்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை வேறு வார்த்தைகளில் கூறு வேண்டுமானால், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படும் முதலீட்டு வருமானம் மனைவியின் வருமானமாக கருதப்படும், அதில் வரி செலுத்த வேண்டும்.

வருமான வரியின் 269எஸ்எஸ் மற்றும் 269டி பிரிவின் கீழ் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை (Cash Transaction) செய்தால் அபராதம் (Penalty) விதிக்கப்படலாம். இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் தளர்வுகளும் கிடைக்கின்றன. 

இந்த சந்தர்ப்பங்களில் விலக்கு கிடைக்கும்

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். தந்தை-மகன், கணவன்-மனைவி மற்றும் சில நெருங்கிய உறவினர்களுக்கு இடையே நடக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படாது. இந்த சந்தர்ப்பங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எளிமையான வார்த்தைகளில் சொல்வதென்றால், கணவனிடமிருந்து பணம் பெற்றால் அதற்கு மனைவி எந்த நோட்டீஸையும் பெற மாட்டார். ஆனால், அவர் இந்த தொகையை மீண்டும் மீண்டும் எங்காவது முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்றால், அந்த வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் எஃப்டி திட்டம்: மாதா மாதம் பம்பர் வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News