காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சனிக்கிழமை, நோய்வாய்ப்பட்ட YES வங்கிக்கு உதவ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
YES வங்கி பங்குகளை வாங்குவது தொடர்பான அறிவிப்பை SBI அறிவித்த சில மணிநேரங்களுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ப.சிதம்பரம், YES வங்கியை மீட்க SBI-க்கு கட்டளையிடப்பட்டு இருப்பதாக தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்,
"IDBI வங்கியின் மீட்பு நடவடிக்கையில் LIC தன்னார்வலராக இல்லாதது போல., SBI மீட்பு நடவடிக்கையில் (YES வங்கிக்கு) ஒரு தன்னார்வலர் என்ற உணர்வு எனக்கு வரவில்லை. இவை கட்டளை நிகழ்ச்சிகள் என்றே சந்தேகிக்க வழிவகுக்கிறது" என்று ப சிதம்பரம் கூறினார்.
YES வங்கி நெருக்கடியை பாஜக-வின் "படுதோல்வி" என்று அழைத்த ப.சிதம்பரம், இது "பாஜக அரசாங்கம் நாட்டின் நிதி நிறுவனங்களை தவறாக நிர்வகிப்பதன் ஒரு பகுதி மட்டுமே" என்று விமர்சித்தார்.
"எந்தவொரு நிதி நெருக்கடிக்கும் சிறந்த நீதிபதி சந்தை தான். நேற்று, சென்செக்ஸ் 884 புள்ளிகள் சரிந்தது. SBI பங்கின் விலை ரூ.18 குறைந்தது, YES வங்கியின் விலை ரூ.36.8-லிருந்து ரூ.16-ஆக குறைந்தது" என்றும் சிதம்பரம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக வியாழன் அன்று ரிசர்வ் வங்கி மூலதன-பட்டினியால் ஆன YES வங்கிக்கு ஒரு மாத கால அவகாசம் விதித்தது மற்றும் வைப்புத்தொகையாளர்களுக்கான மாத திரும்பப் பெறும் வரம்பை ஒரு கணக்கிற்கு ரூ.50,000-ஆக நிர்ணயித்தது. என்றபோதிலும் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் YES வங்கி வைப்பாளர்களுக்கு அவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று உறுதியளித்துள்ளன, மேலும் ரிசர்வ் வங்கி "அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும்" என்றும் உறுதியளித்தது.
இந்த நடவடிக்கையின் வளர்ச்சியில், சனியன்று இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), YES வங்கியில் 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அதன் வாரியம் முதன்மை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய SBI தலைவர் ரஜ்னிஷ் குமார், வங்கி குறைந்தபட்சம் ரூ.2,400 கோடி YES வங்கியில் முதலீடு செய்யவுள்ளது என தெரிவித்தார். SBI-ன் இந்த அறிவிப்பினை அடுத்து தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரின் கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.