TikTok போனா என்னங்க... Youtube கொண்டு வருது அதற்கு இணையான செயலி..!!!

யூடியூப் (YouTube)  நீண்ட காலமாக குறுகிய நேரத்திற்கான வீடியோ (Short Video Making) செயலியை ஏற்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 04:32 PM IST
  • யூடியூப் (YouTube) நீண்ட காலமாக, குறுகிய நேரத்திற்கான வீடியோ (Short Video Making) செயலியை ஏற்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வந்தது.
  • இதற்கு முன்னதாக, இன்ஸ்டாகிராம் தனது தளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) என்னும் ஷார்ட் வீடியோ ப்ளாட்ஃபார்மை தொடங்கியது.
  • YouTube என்பது ஏற்கனவே ஒரு வீடியோ தளமாகும்.
TikTok போனா என்னங்க...  Youtube கொண்டு வருது அதற்கு இணையான செயலி..!!! title=

இந்தியாவில் டிக்டாக் மீதான தடைக்கு பின்னர் இன்ஸ்டாகிராமின் ரீலை ( Instagram Reels) வந்தது.  தற்போது  யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) என்ற  ஷார்ட் வீடியோ ப்ளாட்ஃபார்மை யூட்யூப் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் மீதான தடைக்கு பிறகு, பல நிறுவனங்கள், இதற்கு இணையான செயலியை வெளியிட்டு வருகின்றன.

இதற்கு முன்னதாக, டிக்டாக் (TikTok)  செயலிக்கு இணையாக பேஸ்புக்கின் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் (Instagram) தனது தளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels)  என்னும் ஷார்ட் வீடியோ ப்ளாட்ஃபார்மை தொடங்கியது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

YouTube என்பது  ஏற்கனவே ஒரு வீடியோ தளமாகும். இதில் மக்கள் தங்கள் அனைத்து வகை வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தனை மணி நேர வீடியோ தான் இருக்க வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை. யூடியூப் (YouTube)  நீண்ட காலமாக அதன் மேடையில் குறுகிய நேரத்திற்கான வீடியோ (Short Video Making) செயலியை ஏற்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வந்தது. இப்போது இறுதியாக நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. இந்த சேவை முதலில் இந்திய பயனர்களுக்கு கிடைக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Amazon அள்ளித் தருகிறது ஒரு லட்சம் வேலை வாய்ப்பு..!!!

 

இதனுடன், குறுகிய வீடியோ தயாரிக்கும் செயலியை தயாரிக்கும் பந்தயத்திலும் பேஸ்புக் கூட இணைந்துள்ளது.  பேஸ்புக் பிரேசிலில் 'லாஸ்ஸோ' (Lasso) என்ற பெயரில் ஒரு செயலியை பரிசோதித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த தளத்தில், டிக் டாக் போலவே பயனர்கள், குறுகிய வீடியோக்களைப் பகிர முடியும். இதனுடன், யூடியூப் உரிமம் பெற்ற பாடல்களைக் கொண்டு வீடியோக்களையும் உருவாக்க முடியும்.

ட்விட்டரில்  (Twitter)அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்ட தகவல்களின்படி, டிக்டாக்கில்  இருந்த ஆடியோ மற்றும் பாடலைத் தேர்ந்தெடுக்கும்  அப்ஷனை போலவே, யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) மிக முக்கிய அம்சம் என்னவென்றால், அதன் ஆடியோ மற்றும் பாடல் தொடர்பாக பதிப்புரிமை பிரச்சினை எதுவும் இருக்காது. இந்த பட்டியலில் உரிமம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே இருக்கும், அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

ALSO READ | UIDAI: குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான முக்கிய விதிகள்..!!!

Trending News