தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.210 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏறப்டுத்த ரூ.25 கோடி செலவானது.
வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை ஜூன் மாதம் 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டு.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது
சமூக வலைதளங்களில் தலைவர்கள் பிரச்சாரம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும்.
மேலும் குறைவான வாக்குப்பதிவு நடந்த பாகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.210 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏறப்டுத்த ரூ.25 கோடி செலவானது.
வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை ஜூன் மாதம் 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டு.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது
சமூக வலைதளங்களில் தலைவர்கள் பிரச்சாரம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும்.
மேலும் குறைவான வாக்குப்பதிவு நடந்த பாகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று 6-வது முறையாகவும் மற்றும் தொடர்ந்து 2வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்க உள்ளார். மேலும் அவருடன் 28 பேர் அமைச்சர்களும் பதவியேற்கா உள்ளனர். இவர்களுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்கள் பதவிப் பிரமாணமும் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழா பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். தமிழகத்தில் மிகக்குறைந்த அளவில் வாக்குப்பதிவானது நமது சென்னையில் தான் அதாவது 57 சதவீதம் வாக்குப்பதிவானது. இதைக்குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் வடக்குப் மற்றும் மன்னார் வளைகுடா பக்கத்தில் குறிப்பிடத்தக்க குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென் மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 240 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் வடக்கு திசை நோக்கி நகர்ந்து கடற்கரை ஓரமாகச் செல்லக்கூடும் என பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 232 தொகுதிகளில் தேர்தலும் மற்றும் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டு பதிவு காலை தொடங்கியது. வாக்குப் பதிவு துவங்கிய முதலே பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் போட்டனர். குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலே செலுத்தினர்.
கிஸ்கிந்தா தீம் பார்க்கில் சோதனை ஓட்டத்தின் போது மிகப்பெரிய டிஸ்கோ இராட்சத வீல் சக்கரம் சரிந்து விழுந்தது. விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார், 9பேர் கவலைக்கிடம். இவர்கள் தாம்பரத்தில் உள்ள தீபம் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
மதுரைவாயில் போட்டியிடும் சிபிஐ கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பீம்ராவ் (எம்) ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்.
ஒரு கருத்து கணிப்பு பற்றி பேரணியில் உரையாற்றிய தேமுதிக மக்கள் நலக் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் அவர்கள் கூறியது.
டிவி சேனல்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் உண்மை இல்லை. மக்கள் ஏமாறவேண்டாம் என்றும், இது வெறும் ஏமாற்று வேலை.
டிவி சேனல்கள் அதிமுக இல்லையான திமுக, திமுக இல்லையான அதிமுக என மாறி மாறி காட்டுவார்கள். இந்த இரண்டுமே ஊழல் கட்சிகள்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆளும்கட்சியின் சாதனைகளைக் கூறி மீண்டும் அதிமுகவுக்கே வாக்களிக்கும் படி அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வருகிறது. இதை பயன்படுத்தி கட்சித் தலைவர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களைக் கவர பல்வேறு பிரச்சார யுக்திகளையும் கட்சிகள் கையாண்டு வருகின்றன. தொலைக்காட்சி விளம்பரம், வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூகவலைதளப் பக்கங்களில் தங்களது பிரச்சாரத்திற்கான களமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.