வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால், ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்தார்.
பாஜக தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில், அதன் தலைவர் திரு.எல். முருகன், மிக அமைதியாக இருந்தார். ஆனால், போக போக, அடித்து ஆட ஆரம்பித்து விட்டார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தன்னலமற்ற சமூக சேவகரும்,ஆதரவற்ற முதியோர் நலனுக்காகத் தன்னை, தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவருமான திருமதி சாவித்திரி வைத்தி அவர்கள் காலமாகி விட்ட செய்தி வருத்தமளிக்கிறது. குரலற்றவர்களின் குரலாக விளங்கிய அவர்,’சாவித்திரி அம்மா’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர்; 1978 ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பெற்ற விஸ்ராந்தி, சென்னையின் முதல் முதியோர் இல்லம்.
மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கல்வி இழப்பை ஈடுசெய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பது, காலாண்டு தேர்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை கொண்டு வந்தது.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் மாநிலத்தில் சூடு பிடித்து வருவதால், அதிமுகவில் உயர் மட்ட நிலையில் மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகள், மிக ஆர்வமாக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 22 ஆம் தேதி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செப்டம்பர் 28 ஆம் தேதி பிரேமலதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது
எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்தவர்கள் தான் அமைச்சரவையில் 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளனர், என்றாலும், சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், யார் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்க முடியாத நிலை தான் உள்ளது.
கோயாம்பேட்டில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, மே முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்கெட் திங்கள்கிழமை காலை (செப்.28) முதல் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி நாள் செப்டெம்பர் 30ம் தேதியாகும். ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், பிரச்சனை ஏற்படலாம்.
காசு படைத்தவர்கள் இந்தி மொழியை கற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பெருக்கி கொள்ளும் போது, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுக்கும் வகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது திமுக கட்சி.
SPB பாடகர் மட்டும் அல்ல, அஷ்டாவதானி எனக் கூறலாம், பாடகர் என்பதைத் தாண்டி, இசை அமைப்பாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபல நடிகர்களுக்கு டப்பிங் என பன்முக திறமை கொண்ட கலைஞர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.